உலகப் பெருந்தொற்றான கோவிட்-19 பாதிப்பு மெக்ஸிகோவில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டில் நோய் பாதிப்பு எண்ணிக்கை 20 லட்சத்தை நெருங்கியுள்ளது. ஒரு லட்சத்து 74 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
பாதிப்பைச் சமாளிக்க முடியாமல் மெக்ஸிகோ திணறிவரும் நிலையில், அந்நாட்டிற்கு உதவிக்கரம் நீட்டும்விதமாக சுமார் 8.7 கோவிட்-19 தடுப்பூசி டோஸ்களை இந்தியா அனுப்பிவைத்துள்ளது. சீரம் நிறுவனத்தின் ஆஸ்ட்ரா செனேக்கா தடுப்பூசியை விமானம் மூலம் இந்தியா அனுப்பிவைத்துள்ளது.
இக்கட்டான சூழலில் மெக்ஸிகோவின் வேண்டுகோளை ஏற்று இந்த உதவியை மேற்கொண்ட இந்தியாவுக்கும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும் நன்றி என மெக்ஸிகோ அதிபர் அன்ட்ரேஸ் மனுவேல் லோபஸ் தெரிவித்துள்ளார்.
-
Expressing our Amistad. Mexico receives Made in India vaccines. #VaccineMaitri pic.twitter.com/dQlENoHn38
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) February 14, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Expressing our Amistad. Mexico receives Made in India vaccines. #VaccineMaitri pic.twitter.com/dQlENoHn38
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) February 14, 2021Expressing our Amistad. Mexico receives Made in India vaccines. #VaccineMaitri pic.twitter.com/dQlENoHn38
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) February 14, 2021
மேலும், அடுத்த சில நாள்களில் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசிகளையும் இந்தியா அனுப்பவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஜி7 தலைவர்களுடன் மெய்நிகர் சந்திப்பை நடத்தும் போரிஸ் ஜான்சன்!