ETV Bharat / international

ஏப்ரல் 2021-க்குள் அனைத்து அமெரிக்கர்களுக்கு கரோனா தடுப்பூசி கிடைக்கும் - ட்ரம்ப் உறுதி...!

author img

By

Published : Sep 19, 2020, 4:15 PM IST

வாஷிங்டன்: 2021 ஏப்ரல் மாதத்திற்குள் ஒவ்வொரு அமெரிக்க குடிமகனுக்கும் கரோனா வைரஸ் தடுப்பூசிகள் கிடைக்க அரசு வழிவகை செய்யும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Expect to have enough COVID-19 vaccines for every American by April 2021: Trump

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்று (செப். 18) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தடுப்பூசி பரிசோதனை முடிந்து, உறுதிப்படுத்தப்பட்ட பின் அந்தத் தடுப்பூசியை அனைத்து அமெரிக்க மக்களுக்கும் கிடைக்க அரசு வழிவகைச் செய்யும். அதன்படி ஏப்ரல் 2021-க்குள் அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தற்போது வரை அமெரிக்காவில் மூன்று தடுப்பூசிகள் இறுதி பரிசோதனையில் உள்ளது. இதற்காக நம் மருத்துவர்கள் ஒரு கடிகாரம் போல சுழன்று பணியாற்றிவருகின்றனர். இதன்மூலம் விரைவில் பல மக்களின் உயிர்கள் காக்கப்படுவது மட்டுமின்றி, கட்டுப்பாடுகளும் தளர்க்கப்படும்” என்றார்.

மேலும் பேசிய அவர், தடுப்பூசியைக் கண்டுபிடிக்க அரசு முன்னுரிமை அளிக்கிறது என்றும் தடுப்பூசி உறுதிப்பட்ட 24 மணி நேரத்தில் விநியோகிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

ஜான் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின் படி, அமெரிக்காவில் 67, 05, 114 பேர் கரோனாவால் பாதித்தும், 1, 98, 197 பேர் உயிரிழந்தும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க...டிக்டாக், வி சாட் டவுன்லோடு செய்ய தடை - ட்ரம்ப் அரசு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.