மத்திய அமெரிக்க பகுதியில் உள்ள ஏழு நாடுகளில் ஒன்றான பனாமாவில் இன்று காலை நிலநடுக்கம் உணரப்பட்டது. கட்டங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பொது இடங்களில் தஞ்சம் அடைந்தனர்.
இதுதொடர்பாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பனாமா நாட்டின் டேவிட் நகர் பகுதியில் இருந்து சுமார் 48 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடற்பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், இது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்களின் விவரங்கள் குறித்து அந்நாட்டு சார்பில் இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை.