ETV Bharat / international

நியூயார்க்கில் தொடங்கியது முன் கூட்டியே வாக்களிக்கும் நடைமுறை!

author img

By

Published : Oct 25, 2020, 3:49 PM IST

வாஷிங்டன்: முன்கூட்டியே வாக்களிக்கும் நடைமுறையை பயன்படுத்தி, அமெரிக்க அதிபர் தேர்தலில் நியூயார்க்கில் மக்கள் வாக்கு செலுத்தி வருகின்றனர்.

Early voting begins in New York state
Early voting begins in New York state

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3ஆம் தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் அதிபர் ட்ரம்ப் இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியிடுகிறார்.

தற்போதுவரை வெளியான கருத்துக் கணிப்புகளில் ஜனநாயகக் கட்சியினரே முன்னணியில் உள்ளனர். தேர்தலுக்கு இன்னும் 10க்கும் குறைவான நாள்களே உள்ள நிலையில், ட்ரம்ப் தனது பரப்புரையைத் தீவிரப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், முன்கூட்டியே வாக்களிக்கும் முறையை பயன்படுத்தி, நேற்று (அக்டோபர் 24) முதல் நியூயார்க் மக்கள் தங்களது வாக்கை செலுத்தி வருகின்றனர். வாக்களிக்கும் நாளன்று நீண்ட வரிசையிலிருந்து காத்திருந்து வாக்களிக்கும் போது கூட்டங்களை தவிர்க்கவும், தங்களது வேலைகளை கவனிக்கவும் தொடங்கப்பட்டுள்ள இந்த நடைமுறை மூலம் நவம்பர் 1ஆம் தேதி வரை வாக்களிக்கலாம்.

இது குறித்து ட்வீட் செய்துள்ள நியூயார்க் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ, “முதன் முறையாக ஜனாதிபதி தேர்தலில் நியூயார்க்கர்கள் முன்கூட்டியே வாக்களிக்கும் முறையை பயன்படுத்தி அதிக அளவு வாக்களித்து வருகின்றனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சனிக்கிழமை நிலவரப்படி, குறைந்தது 56.5 மில்லியன் அமெரிக்கர்கள் ஏற்கனவே நாடு முழுவதும் முன்கூட்டியே வாக்களிக்கும் முறையை பயன்படுத்தி, அமெரிக்க அதிபர் தேர்தலில் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க...அமெரிக்க அதிபர் தேர்தல்: வாக்களித்தார் அதிபர் ட்ரம்ப்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.