அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தைச் சேர்ந்த குயாஹோகா கவுண்டி காவல்துறையினர் செவ்வாய் கிழமையன்று வீடியோ ஒன்றை வெளியிட்டனர். அந்த வீடியோவில், சிறையின் பயிற்சி முற்றத்தில் கைதி ஒருவர் மேலே பார்த்துக்கொண்டிருக்கிறார். பின்னர் மேலே இருந்து ட்ரோன் மூலம் ஒரு பொருள் கீழே விழுகிறது. அந்த பொருளை மறைத்து எடுத்துக்கொண்டு கேமராவின் பார்வையிலிருந்து வெளியேறுகிறார்.
இதுகுறித்து சிறை அலுவலர்கள் விசாரணை நடத்தியதில் ட்ரோன் மூலம் கீழே வீசப்பட்ட பார்சலில் செல்ஃபோன், போதை பொருட்கள் இருந்ததாக தெரிவித்துள்ளனர். பின்னர் சிறை தலைமை அலுவலர் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இதையும் படிங்க: அமெரிக்கா அதிபரைப் பார்த்து முறைத்த சிறுமி!