கரோனா தொற்று காரணமாக டிஸ்னி லேண்ட் பொழுதுபோக்கு பூங்காக்கள் பல மாதங்களாக மூடப்பட்டது. பின்னர், கரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து, சமீபத்தில் மீண்டும் டிஸ்னி லேண்ட் பூங்காக்கள் ஒவ்வொன்றாக திறக்கப்பட்டன. இருப்பினும் நிதி நெருக்கடியில் கடுமையாக தவித்து வந்ததால், பகுதி நேர ஊழியர்கள் 28 ஆயிரம் பேரை நீக்கவுள்ளதாக கடந்த மாதம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் 32 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக டிஸ்னி லேண்ட் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கரோனாவுக்கு பின்னர் திறக்கப்பட்ட டிஸ்னி லேண்டிற்கு மக்கள் அதிகளவில் வருகை தந்தாலும், எதிர்பார்த்த வருமானம் கிடைக்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. கரோனா பரவலை தடுத்திட அந்நிறுவனம் மேற்கொண்ட பாதுகாப்பு நடவடிக்கைகளால் நிதி நெருக்கடியில் சிக்கியதாக கூறப்படுகிறது.