புவெனஸ் அயர்ஸ்: கால்பந்து ஜாம்பவானான டியாகோ மரடோனாவுக்கு நவம்பர் 3ஆம் தேதி மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இன்று வீடு திரும்பினார்.
60 வயதான மரடோனா, புவெனஸ் அயர்ஸிலுள்ள ஒலிவோஸ் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
அவர் நகரின் வடக்கு புறநகரிலுள்ள டைக்ரேவில் உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
முன்னதாக, அவரது வழக்கறிஞர் மத்தியாஸ் மோர்லா கூறுகையில், 1986 ஃபிஃபா உலகக் கோப்பை வென்றவர், அவரது வாழ்க்கையின் கடினமான நேரத்தை தற்போது வென்று, நன்றாக உணர்கிறார் என்றார்.