தென்னமெரிக்க நாடான பிரேசிலில் கடும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள தென் கிழக்குப் பகுதியில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் பெட்ரோபோலிஸ் என்ற பகுதி வெள்ளக்காடாகா காட்சியளிக்கிறது.
வெள்ள பாதிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் சிக்கி இதுவரை 130 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 200க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் அவசர நிலையை அறிவித்த பிரேசில் அதிபர் ஜெயர் போல்சனாரோ, மீட்புக்குழுவினரை களமிறக்கியுள்ளார். அத்துடன் 95 மில்லியன் அமெரிக்கன் டாலர் மதிப்பிலான தொகையை அவசர நிதியாக அதிபர் போல்சனாரோ விடுவித்துள்ளார்.
இதையும் படிங்க: இந்தியா, ஐக்கிய அரபு இடையே வர்த்தக ஒப்பந்தம் 'கேம் சேஞ்சர்' - வர்ணித்த மோடி!