ETV Bharat / international

ஈரான் கப்பலை கைப்பற்ற அமெரிக்க உத்தரவு! - ஈரான் எண்ணெய் கப்பல்

வாஷிங்டன்: ஜிப்ரால்டரிலிருந்து விடுவிக்கப்பட்ட ஈரான் எண்ணெய் கப்பலை கைப்பற்ற அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

ஈரான் கப்பலை கைப்பற்ற அமெரிக்க உத்தரவு!
author img

By

Published : Aug 17, 2019, 6:06 PM IST

மெரிடரேனியன் கடலில் உள்ள ஜிப்ரால்டர் பகுதி தற்போது பிரிட்டன் கட்டுப்பாட்டில் உள்ளது. அதன் அருகே சென்றுகொண்டிருந்த க்ரேஸ்-1 என்ற ஈரான் கப்பலை ஜிப்ரால்டர் கடற்படையினர் கைப்பற்றினர்.

அந்த கப்பல் சிரியா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடையை மீறி எண்ணெய் எடுத்துச் சென்றதாக பிரிட்டன் குற்றம்சாட்டியது. பின்னர், இதுதொடர்பாக ஜிப்ரால்டர் நீதிமன்றத்தில கடந்த மாதம் நடைபெற்ற விசாரணையில், ஈரான் எண்ணெய் கப்பலை 30 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஹோர்முஸ் நீரின் வழியாக பயணித்த ஸ்டின் எம்போரியோ என்ற பிரிட்டன் எண்ணெய் கப்பலை ஈரான் சிறைபிடித்தது. இதனிடையே, ஜிப்ரால்டரில் கைப்பற்றப்பட்ட ஈரான் எண்ணெய் கப்பலை தங்களிடம் ஒப்படைக்குமாறு அமெரிக்க வலியுறுத்தியிருந்தது.

இந்நிலையில், ஈரான் கப்பலை நேற்று ஜிப்ரால்டரில் இருந்து பிரிட்டன் அரசு விடுவித்தது. இதையடுத்து, ஈரான் கப்பலை மீண்டும் சிறைபிடிக்க அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.

Intro:Body:

Day after Gibraltar releases Iranian tanker, US 

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.