அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் (சி.டி.சி) தரவுகளின் படி, பிப்ரவரி மாதத்தின் முக்கியமான காலங்களில் அரசு ஆய்வகங்கள் 352 கோவிட்-19 சோதனைகளை மட்டுமே செயலாக்கியுள்ளது.
அதாவது, சராசரியாக ஒரு நாளைக்கு ஒரு டஜன் சோதனைகள் மட்டுமே நடந்துள்ளது. அதற்குள், வைரஸ் ஏற்கனவே அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் வேரூன்றிவிட்டது.
மார்ச் மாத தொடக்கத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்கர்களுக்கு சி.டி.சி உருவாக்கிய கோவிட்-19 சோதனை “சரியானது” என்றும் “ஒரு சோதனையை விரும்பும் எவரும் பரிசோதனையை செய்துகொள்ளலாம்” என்றும் உறுதியளித்தார்.
இவ்வாறான அதிகப்படியான சோதனை தவறுகள், கோவிட்-19 தொற்றுநோயைத் தோற்கடிக்க பெரும் சவாலாக அமைந்துவிட்டது.
நிலைமையை நேரடியாக அறிந்த சுகாதார அலுவலர்கள், “சி.டி.சி நிபுணர்களுக்கு வழங்கப்பட்ட ஏஜென்சியின் பல சோதனை கருவிகள் வைரஸை நம்பத்தகுந்த முறையில் கண்டறியத் ஏன் தவறிவிட்டன என்று தெரியவில்லை” என்று கூறினார்கள்.
அந்த வகையில், பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பது, அவர்களின் தொடர்பு சங்கிலியை கண்டுபிடிப்பது மற்றும் சமூகத்தில் பரவிய ஆபத்தைத் தணிப்பது என அமெரிக்காவின் தோல்விகள் தொடர்ந்தது.
மூவாயிரத்து 600க்கும் மேற்பட்ட நோய் துப்பறியும் நபர்களுக்கு திறமையான பயிற்சி அளித்த போதிலும் அமெரிக்கா நோய் தொற்றின் தடத்தை கண்டறிவதில் தோல்வியுற்றது.
ஆரம்பகால சோதனை தோல்விகள் காரணமாக அவர்களால் தங்கள் வேலைகளைச் செய்ய முடியவில்லை. இந்த நெருக்கடிக்கு தனது நிர்வாகத்தின் பதிலை ட்ரம்ப் வழங்கினார்.
இருப்பினும், தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்களின் நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் அந்தோனி ஃபௌசி, “சி.டி.சி யின் அமைப்பு கோவிட்-19 பரவலை கண்டறிய வடிவமைக்கப்படவில்லை “இது ஒரு தோல்வி ". என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தப் விவகாரத்தில் வெளி பார்வையாளர்களும் கூட்டாட்சி சுகாதார அலுவலர்களும் நான்கு முதன்மை பிரச்னைகளை சுட்டிக்காட்டியுள்ளனர். அவைகள் வருமாறு:-
- உலக சுகாதார அமைப்பு ஏற்றுக்கொண்ட சோதனையை பயன்படுத்த வேண்டாம் என்று முடிவு எடுத்தது.
- நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு (சி.டி.சி) தரவு (சி.டி.சி) உருவாக்கிய மிகவும் சிக்கலான சோதனை குறைபாடுகள்.
- சோதனைத் திறனை அதிகரிக்க தனியார் துறையை ஈடுபடுத்துவதில் ஏற்பட்ட தாமதம்.
- அரசாங்க வழிகாட்டுதல்களில் ஏற்பட்ட சுணக்கம்.
இந்த குறைபாடு அணுகுமுறையால், உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாடு தள்ளாடி வருகிறது. இந்தச் சூழலில் அமெரிக்கா மீண்டும் "சர்வ சக்தி வாய்ந்ததாக" இருக்குமா என்பதை கண்டறிவது கூட கடினம் என்றே சொல்ல வேண்டும்.