உலக சுகாதார அமைப்பு கரோனா பாதிப்பை எதிர்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து சர்வதேச தலைவர்கள், முன்னணி அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனைக் கூட்டம் நடத்தியது.
அப்போது, உலகநாடுகள் ஒருங்கிணைந்த செயல்திட்டத்தை மேற்கொண்டு கரோனாவை எதிர்கொள்வது எப்படி எனத் தெரிவித்துள்ளது. இந்தக் கூட்டத்தில், பிரான்ஸ் அதிபர், ஜெர்மனி அதிபர், ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் ஆகியோர் பங்கேற்று, வைரஸை எதிர்கொள்ளும் நடவடிக்கையில் தங்களின் உறுதிப்பாட்டைத் தெரிவித்தனர். சர்வதேசத் தலைவர்களின் ஒத்துழைப்புக்கு உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் நன்றி தெரிவித்துள்ளார்.
அனைத்து நாடுகளின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் கைகோர்க்கும் பட்சத்தில் இந்த வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டுவருவது உறுதி என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், 'கோவிட்-19 Tools Accelerator' பல அமைப்புகளின் சக்தியை ஒன்றிணைக்க உதவும் என டெட்ரோஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கரோனா வைரசுக்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி ஜனவரி மாதம் முதலே நடைபெற்று வருகிறது. இதில், ஈடுபட்டுள்ள ஆராய்ச்சியாளர்களுடன் சேர்ந்து உலக சுகாதார அமைப்பும் செயல்பட்டு வருவதாக அந்த அமைப்பு வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : அமைதி ஒப்பந்தத்தை ஆப்கான் அரசு சூறையாடுகிறது - தலிபான் குற்றச்சாட்டு