ETV Bharat / international

'கரோனா வைரஸ் ஸ்பானிஷ் காய்ச்சலைப் போன்றே உயிர் பலியை வாங்கும்' - ஃபாஷி

author img

By

Published : Jul 16, 2020, 3:19 AM IST

வாஷிங்டன்: 1918ஆம் ஆண்டில் வந்த ஸ்பானிஷ் காய்ச்சலைப் போன்றே கரோனா வைரஸ் தொற்று உயிர் பலியை வாங்கும் என உலகப் புகழ்பெற்ற தொற்று நோய் நிபுணர் அண்டனி ஃபாஷி தெரிவித்துள்ளார்.

Coronavirus has potential to be as serious as 1918 Spanish Flu: Fauci

கரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் இன்றளவும் வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை கரோனா வைரஸ் தொற்றால் சுமார் 13 மில்லியனுக்கும் மேல் பாதித்தும், ஐந்து லட்சத்து 82 ஆயிரத்து 115 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகம் நடத்திய குளோபல் ஹெல்த் காணொலி மாநாட்டில் பங்கேற்ற உலகப் புகழ்பெற்ற தொற்று நோய் நிபுணர் அண்டனி ஃபாஷி கூறுகையில், '1918ஆம் ஆண்டில் வந்த ஸ்பானிஷ் காய்ச்சலில் உலகம் முழுவதும் 50 மில்லியன் மக்கள் உயிரிழந்தனர். இந்த ஸ்பானிஷ் வைரஸ் தான் அனைத்து வைரஸ்களுக்கும் தாய். இந்த வைரஸ் தொற்றைப் போன்று கரோனா வைரஸ் தொற்றும் பரவும் அபாயம் உள்ளது’ என்றார்.

மேலும், அமெரிக்காவை பொறுத்தவரை கலிபோர்னியா, புளோரிடா, அரிசோனா, டெக்சாஸ் மாகாணங்களில் கரோனா வைரஸ் தொற்று மேலும் பரவும்’ எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க...'கரோனா காரணமாக மேலும் 132 மில்லியன் மக்கள் பசியால் பாதிக்ககூடும்' - ஐ.நா. எச்சரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.