ஒவ்வொரு ஆண்டும், ஜெனீவாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் உலக பொருளாதார மன்றமானது (World Economic Forum), பொருளாதாரத்தில் திறம்படப் போட்டியிடும் நாடுகளின் பட்டியலைத் தயார் செய்து வெளியிடும். இதில், 2018ஆம் ஆண்டு 58ஆவது இடத்தை பிடித்திருந்த இந்தியா, 2019ஆம் ஆண்டுக்கான பட்டியலில் 68ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.

Rbi Recruitment 2019 நல்ல சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை!
பிற நாடுகளின் பொருளாதார வளர்ச்சியே, இந்தியாவின் இந்த பின்னடைவுக்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. 2018ஆம் ஆண்டு பட்டியலில் முதலிடத்தைத் தக்கவைத்திருந்த அமெரிக்காவைத் துரத்திவிட்டு, இந்த ஆண்டு பட்டியலில் சிங்கப்பூர் முதலிடம் பெற்றுள்ளது. இந்தியாவிற்கு அடுத்து முறையே இலங்கை (84), வங்கதேசம் (105), நேபாளம் (108), பாகிஸ்தான் (110) ஆகிய அண்டை நாடுகள் பட்டியலில் பின்தங்கி உள்ளது.

மேலும், பிரிக்ஸ் அமைப்பைச் சேர்ந்த நாடுகளில் மிகவும் மோசமான பொருளாதாரப் போட்டித்தன்மை கொண்ட நாடாகவும் இந்தியா உள்ளது. மற்றொரு பிரிக்ஸ் நாடான பிரேசில் 71ஆவது இடத்தில் இருக்கிறது. ஆண் பெண் ஊழியர்கள் விகிதத்தில் இந்தியா 128வது இடத்திலும் திறமைக்கு ஊக்கம் அளிப்பதில் 107வது இடத்திலும் உள்ளது.