உலக நாடுகளை மிரட்டிய கரோனா வைரஸ், அமெரிக்காவில் கோரத் தாண்டவம் ஆடிவருகிறது. தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழக்கின்றனர். பல ஆயிரம் மக்கள் வேலையிழக்க வேண்டிய சூழ்நிலையும் உருவானது. கடந்த 10 ஆண்டுகளில், முதல்முறையாக சீன அரசு அமெரிக்காவில் செய்யும் நேரடி முதலீட்டை குறைந்துள்ளது என, தகவல் வெளியாகியுள்ளது.
நேரடி முதலீட்டில் அலுவலகங்கள், தொழிற்சாலைகள் மீதான முதலீட்டைதான் குறிக்கிறது. ஆனால், பங்குகள் வாங்கும் நிதி முதலீடுகள் ஆகியவை நேரடி முதலீட்டில் சேராது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சுமார் 360 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள சீனப் பொருள்களுக்கு சுங்கவரி விதித்துள்ளார்.
ட்ரம்ப் நிர்வாகமும், பெய்ஜிங்கும் கடந்த ஜனவரி மாதம் ஒரு இடைக்கால வர்த்தக உடன்பாட்டுக்கு வந்தன. ஆனால், இந்த ஒப்பந்தம் கரோனா தொற்றால் முறியடிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:குறி தவறி சொந்த நாட்டு கப்பலை தாக்கிய ஏவுகணை!