ETV Bharat / international

சீனா, ரஷ்யா, ஈரான் மூலம் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு ஆபத்து

author img

By

Published : Aug 8, 2020, 8:39 PM IST

வாஷிங்டன்: வரும் நவம்பர் மாதம் நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் சீனா, ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகள் அத்துமீறி தலையீடு செய்யலாம் என அமெரிக்க உளவுத் துறை எச்சரித்துள்ளது.

US
US

அமெரிக்காவில் வரும் நவம்பர் மூன்றாம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நான்காண்டு பதவிக்காலம் நிறைவடையவுள்ளதால் இந்தத் தேர்தல் நடைபெறுகிறது. குடியரசுக் கட்சி சார்பில் இரண்டாம் முறையும் அதிபர் ட்ரம்ப் போட்டியிடவுள்ளார். அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், வரப்போகும் தேர்தலில் வெளிநாட்டு சக்திகள் மக்களைக் குழப்பமடையச் செய்து தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக அமெரிக்க உளவுத் துறை எச்சரித்துள்ளது. அந்நாட்டின் உளவு அமைப்பான என்.சி.எஸ்.சி. (NCSC) தலைவர் வில்லியம் எவானியா இதைத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக சீனா, ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகள் போலி தகவல்களைப் பரப்பி தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். ஏற்கனவே, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும் வரப்போகும் தேர்தலில் முறைகேடுகள் நடக்கலாம் எனத் தொடர்ந்து குற்றஞ்சாட்டிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'மத பரப்புரையாளர் ஜாகிரை ஏற்க எந்த நாடும் முன்வரவில்லை' - மகாதீர் பின் முகமது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.