கரோனா தொற்றின் தாக்கம் அமெரிக்கா, இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகளில் இன்னும் முழுமையாக கட்டுப்படுத்தப்படவில்லை. இந்த வைரஸ் பரவலுக்கு மருந்து கண்டுபிடிக்கவும் வைரஸ் எவ்வாறு பரவுகிறது என்பதை தெரிந்துகொள்ளவும் உலகெங்கும் பல்வேறு ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.
கரோனா பரவல் குறித்து மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனை மற்றும் குழந்தைகளுக்கான மாஸ் பொது மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய விரிவான ஆய்வில், முன்பு கணிக்கப்பட்டதைவிட இளைஞர்கள் மூலம் கரோனா அதிகளவில் பரவியுள்ளதாக தெரியவந்துள்ளது.
கரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வந்த குழந்தைகள், வளரிளம் பருவத்தினர் என மொத்தம் 192 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இவர்களில் 49 பேருக்கு கோவிட்-19 உறுதி செய்யப்பட்டது. மேலும், 18 பேருக்கு தாமதமாக இந்தத் தொற்று உறுதி செய்யப்பட்டது.
அறிகுறிகள் தென்படாத குழந்தைகளும் தங்கள் சுவாச பாதையில் அதிக அளவு கரோனா வைரஸை சுமப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கரோனா பாதிப்பின் வீரியத்திற்கும் வயதிற்கும் தொடர்பில்லை. இதன் காரணமாக வைரஸ் பரவல் வேகம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
குறிப்பாக, கோவிட்-19 உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பெரியவர்களை காட்டிலும், அறிகுறியற்ற அல்லது ஆரம்பகால தொற்று உடைய குழந்தைகள் அதிக வைரஸைகளை உடலில் வைத்திருப்பதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இதன் காரணமாக குழந்தைகள் அதிகம் ஒன்றுகூடும் பள்ளிகள், அங்கன்வாடிகள் உள்ளிட்டவற்றை திறந்தால் வைரஸ் பரவல் பலமடங்கு அதிகரிக்கும் என்றும் ஆராயாச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த ஆய்வு குறித்து மாஸ் பொது குழந்தை மருத்துவமனையின் உதவி பேராசிரியர் லீல் யோன்கர் கூறுகையில், "வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட ஆரம்ப நாள்களில் குழந்தைகளிடம் அதிக அளவு வைரஸ் இருப்பதைக் கண்டு எனக்கு ஆச்சரியமாக இருந்தது. குழந்தைகளிடம் இவ்வளவு அதிகமாக வைரஸ் இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
கரோனா வைரஸ் முதலில் இந்த புரதத்தைதான் தாக்கும், ACE2 புரதம் குழந்தைகளிடம் குறைவாகவே இருக்கும். இருப்பினும், குழந்தைகளிடம்தான் இந்த வைரஸ் அதிகம் உள்ளது” என்றார்.
இதையும் படிங்க: ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவருக்கு விஷம் கொடுக்கப்படவில்லை - மருத்துவர்கள் மறுப்பு