சமூக வலைதளங்களில் வைரல் என்னும் வார்த்தை பலகிய ஒன்று. ஏதோ ஒரு விஷயம் எவரோ ஒருவரால் பதிவேற்றப்பட்டு இரண்டு நாட்களுக்குள் அது ட்ரெண்டாகினால், அது வைரல் என்ற வார்த்தையை பெற்றுவிடும்.
அப்படி எடுத்துக்காட்டிற்கு 'ஐஸ் பக்கெட் சேலஞ்ச்', 'வெக்குவம் சேலஞ்ச்' என்று பல சேலஞ்சுகளின் பட்டியல் நீளும். சமீபத்தில் 'கீகீ சேலஞ்ச்' என்னும் ஒன்றை வீடியோ எடுத்து ஒவ்வொருவரும் அவரவர் ட்விட்டர், இன்ஸ்ட்ராகாம் பக்கத்தில் பதிவேற்றினர். பிரபலங்கள் தொடங்கி பலரும் இதில் ஆர்வம் காட்டி பதிவேற்றினர். காரில் பயணிக்கும் போதே இடையில் இறங்கி நடனமாடுவதை 'கீகீ சேலஞ்ச்' என்று வைரலாக்கினர்.
அதனை தொடர்ந்து தற்போது 'பாட்டில் கேப் சேலஞ்ச்' வைரலாகி வருகிறது. பாட்டிலின் மூடியை தனது கால் நுனியால் திறக்க வேண்டும், அதில் பாட்டில் கீழே விழுகாமல் அதனை செய்ய வேண்டும். அதுதான் தற்போது வைரலாகி வரும் 'பாட்டில் கேப் சேலஞ்ச்'. வழக்கம் போல் இதனை பிரபலங்களும் ஆர்வமாக செய்து அவர்கள் ட்விட்டர், இன்ஸ்ட்ராகாம் பக்கத்தில் பதிவு செய்துள்ளனர். ஹாலிவுட் நடிகர் ஜான் மேயர், ஜாசோன் ஸ்டாதாம் உள்ளிட்ட பலர் சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர்.