அமெரிக்க ஆதரவு ஆப்கான் அரசை வீழ்த்த தலிபான் அமைப்பு பல ஆண்டுகளாக முயற்சி செய்துவருகிறது. இருப்பினும், ஐஎஸ் அமைப்பின் ஆதிக்கத்திற்கு பிறகு, அமெரிக்க அரசும் தலிபான் அமைப்பும் தங்களின் கடந்த கால பகையை மறந்து ஐஎஸ் அமைப்புக்கு எதிராக இயங்கி வருகின்றன.
இதனைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் அரசுக்கும் தலிபான் அமைப்புக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் கோர் மாகாணத்தில் காவல்துறையினர் தலைமையகம் மற்றும் பிற அரசு கட்டடங்களின் நுழைவாயிலுக்கு அருகே இன்று (அக்.18) வெடிகுண்டுகளுடன் நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென வெடித்து சிதறியது.
இந்தத் தாக்குதலில் 12 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்தக் கொடூர தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும் தலிபான் பயங்கரவாதிகள் தான் காரணம் என பாதுகாப்பு படையினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
கோரில் உள்ள மருத்துவமனை தலைவர் முகமது ஓமர் லால்சாத், "குண்டுவெடிப்பில் சிக்கிய ஊழியர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம். இதில் பலரது நிலைமை மோசமாக உள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை உயரும்" என்றார்.
கத்தாரில் ஆப்கான் அரசு பிரதிநிதிகள், தலிபான்கள் ஆகியோருக்கிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றுவரும் நிலையில், இத்தாக்குதல் சம்பவம் பேச்சுவார்த்தைக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய கொள்ளைக் கும்பல்; எதிர்த்துப் போராடும் நபர் - வைரலாகும் காட்சி!