உலக நாடுகளை கரோனா வைரஸ் மிரட்டிக்கொண்டிருப்பதால் மக்கள் கொத்து கொத்தாக உயிரிழக்கின்றனர். சொல்லப்போனால் வைரஸ் சீசனாகவே இந்த காலம் மாறிவிட்டது.
கரோனா வைரஸ், டெல்டா வைரஸ், டெல்டா பிளஸ், கறுப்புப் புஞ்சை, மஞ்சள் பூஞ்சை வைரஸ், சீனாவில் குரங்கு பி வைரஸ், இங்கிலாந்தில் நோரோ வைரஸ் என அதன் வரிசை நீண்டுகொண்டே செல்கிறது.
இந்நிலையில், அமெரிக்காவில் மரணத்தை ஏற்படுத்தும் புதிய வகை தொற்று பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிய வகை தொற்று
அமெரிக்காவின் டல்லாஸ், வாஷிங்டன் டி.சியில் உள்ள மருத்துவமனைகளில் உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய 'கேண்டிடா ஆரிஸ்' என்கிற புதிய பூஞ்சை தொற்றால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.
இந்த பூஞ்சை தொற்று நேரடியாக ரத்த ஓட்டத்தை பாதித்து மரணத்தை விளைவிக்கக்கூடியது எனவும், நீண்டகாலம் நோய்வாய்ப்பட்டோரும், எதிர்ப்பு சக்தி குறைவானோரும் இந்தப் பூஞ்சைத் தொற்றால் பாதிக்கப்படலாம் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
'கேண்டிடா ஆரிஸ்' தொற்று
'கேண்டிடா ஆரிஸ் தொற்றுக்கு வாஷிங்டன் டி.சியில் இதுவரை 101 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டல்லாஸ் மாகாணத்தில் 22 பேருக்கு இந்த பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அறிகுறிகளும், பரவும் வேகமும்
காய்ச்சல் மற்றும் குளிர் ஆகியவை இந்த நோய் தொற்றின் அறிகுறிகள் எனத் தெரிகிறது. இந்த பூஞ்சை தொற்று குறித்த ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த பூஞ்சை தொற்று ஒருவரிடமிருந்து ஒருவருக்கு பரவக்கூடியது. அதுமட்டுமின்றி, சுகாதாரமற்ற மேற்பரப்புகள், உபகரணங்கள் உபயோகிக்கூடிய மருத்துவமனைகள், பிற பராமரிப்பு வசதிகள் மூலம் பரவுவதாகவும் கூறப்படுகிறது.
உலகளாவிய சுகாதார அச்சுறுத்தல்
அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கேண்டிடா ஆரிஸ் என்கிற இந்த பூஞ்சை தொற்றை உலகளாவிய சுகாதார அச்சுறுத்தல் என்று கூறியுள்ளது.
இதையும் படிங்க: குழந்தைகளுக்கு செப்டம்பர் மாதத்தில் தடுப்பூசி!