மனைவிக்கு கொரோனா தொற்று அறிகுறி தென்பட்டதையடுத்து தன்னைத் தானே தனிமைப்படுத்திக்கொள்வதாக கனடா நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.
தனது மனைவி சோபி பிரிட்டன் சென்றுவிட்டு திரும்பும்போது உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் வீட்டிலிருந்தே தொலைபேசி அழைப்புகள், விளக்கங்கள் மெய்நிகர் கூட்டங்களில் பங்குபெறுவார் எனவும் பிரதமர் அலுவலகத்திலிருந்து வெளியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், ஒட்டாவாவில் கனடாவின் மாகாண மற்றும் பிராந்திய தலைவர்களுடனான சந்திப்பையும் ட்ரூடோ ரத்து செய்துள்ளார்.
இதையும் படிங்க: கொரோனா பாதிப்பு: மனித உரிமைகள் ஆணைய அமர்வு நிறுத்தம்!