ETV Bharat / international

செவிலியருக்கு முதல் தடுப்பூசியை செலுத்திய கனடா

author img

By

Published : Dec 15, 2020, 3:52 PM IST

கனடா அரசு தங்களது நாட்டில் வழங்கப்படும் கரோனா தடுப்பூசியை முதலாவதாக அனிதா குய்டாங்கன் என்ற செவிலியருக்கு செலுத்தியுள்ளது.

Canada administers 1st doses of Covid-19 vaccine

டொராண்டோ: கனடா அரசு கரோனா வைரஸிலிருந்து முதியவர்களை காக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்த வண்ணமே இருந்தது. இதற்கு கரோனாவால் பாதிக்கப்பட்ட 13 ஆயிரத்து 430 பேரில் எட்டாயிரத்து 460 பேர் உயிரிழந்ததே காரணம்.

இதனைக் கருத்தில் கொண்டு, கனடா அரசு பல்வேறு நாடுகளிடம் கரோனா தடுப்பூசிக்கான ஒப்பந்தங்களை மேற்கொண்டுவந்தது. மேலும், தற்போது ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் உடனான ஒப்பந்தத்தையும் திருத்தியுள்ளது.

இதற்கிடையில், கனடா அரசு டொராண்டோவில் உள்ள ரெக்காய் சென்டர் நர்சிங் ஹோமில் செவிலியராக பணியாற்றி வரும் அனிதா குய்டாங்கன் என்ற நபருக்கு தடுப்பூசியை செலுத்தியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த அனிதா குய்டாங்கன், "இந்த கரோனா தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக்கொண்டது பெருமையாக கருதுகிறேன். மக்களுக்காக தொடர்ந்து பணி செய்யவே ஆவலாக உள்ளேன். நம்ப இயலாத அளவிற்கு கரோனா வைரஸை கனடா கையாண்டுவருகிறது" என்றார்.

இதனிடையே, டொராண்டோவில் தடுப்பூசியை பெற்றுக்கொண்ட மற்றொரு செவிலியர் டெரெக் தாம்சன், காய்ச்சல் வருவது போல் உணர்ந்ததாகக் கூறியுள்ளார். அடுத்து என்ன நடக்கும் என தெரியவில்லை. இருப்பினும் கரோனா வைரஸிற்கு எதிராக தொடர்ந்து போராடுவோம் எனக் கூறியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.