ETV Bharat / international

பரப்புரைக்கு 500 கிலோ எடையுள்ள கரடியுடன் வந்த குடியரசு கட்சி வேட்பாளர்! - Tag bear

பரப்புரை கூட்டத்திற்கு 500 கிலோ எடையுள்ள கரடியை, குடியரசு கட்சி வேட்பாளர் ஜான் காக்ஸ் அழைத்து வந்தது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

California Governor
500 கிலோ கரடி
author img

By

Published : May 7, 2021, 3:11 PM IST

கரோனா பரவலை முறையாக கையாளாத கலிபோர்னியா ஆளுநரைத் திரும்பப் பெறுவதற்கான பொது வாக்கெடுப்பு பரப்புரைக்கு, குடியரசு கட்சி வேட்பாளர் ஜான் காக்ஸ் 500 கிலோ எடை கொண்ட கரடியை அழைத்து வந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

பியூட்டி அண்ட் பீஸ்ட் என்ற கருப்பொருளில் ஜான் காக்ஸ் பரப்புரை மேற்கொள்கிறார். இதில், தற்போதைய ஆளுநர் கவின் நியூசோமை பியூட்டி என்றும், தன்னை பீஸ்ட் என்றும் அறிமுகப்படுத்திக்கொண்டார்.

அழகான அரசியல்வாதிகள் கலிபோர்னியாவில் தோல்வியுற்றுள்ளனர். எனவே, கலிபோர்னியாவின் முன்னேற்றத்துக்கு மிருகத்தனமான மாற்றங்கள் தேவை எனத் ஜான் காக்ஸ் தெரிவித்துள்ளார்.

மக்களுக்குத் தன்னை பீஸ்ட் எனச் சொல்வதற்காக, திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்த டேக்(tag) என்ற 500 கிலோ கரடியை சேக்ரமெண்டோ நகரில்(Sacramento) நடந்த பிரச்சார கூட்டத்திற்கு அழைத்துவந்திருந்தார்.

ஜான் காக்ஸின் பரப்புரை முடியும்வரை, பயிற்சியாளர் கொடுத்த உணவுகளை கரடி பொறுமையாக ருசித்து சாப்பிட்டுக்கொண்டிருந்தது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.