ETV Bharat / international

அமெரிக்காவில் பண மழை.. வெள்ளிக்கிழமை அதிகாலை கண்ணை திறந்த லட்சுமி!! - கலிபோர்னியா

அமெரிக்காவில் வெள்ளிக்கிழமை அதிகாலை பண மழை பொழிந்த சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இது குறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

California
California
author img

By

Published : Nov 21, 2021, 7:28 PM IST

கலிபோர்னியா : அமெரிக்காவில் பண மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனம் ஒன்று கருவூலத்துக்கு சென்று கொண்டிருந்தது.

அந்த வாகனம் வெள்ளிக்கிழமை அமெரிக்காவில் உள்ள இரு மாகாணங்களை கடக்கும் பிரதான தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, சரக்கு வாகனத்தில் இருந்த மூட்டையில் இருந்து பணங்கள் சிதறி சாலையில் விழுந்தன.

சிறிது நேரத்தில் அந்தச் சாலைப் பகுதியில் பண மழை பொழிய ஆரம்பித்தது. காற்றில் 1 டாலர் முதல் 20 டாலர் வரையிலான பணங்கள் பறந்து வந்தன. இதைப் பார்த்த அப்பகுதிவாசிகள் மழைக் காலத்தில் ஈசலை பிடிப்பது போல் போட்டிப் போட்டுக்கொண்டு பணத்தை அள்ளிச் சென்றனர்.

இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை (நவ.19) அதிகாலை நடந்துள்ளது. பணம் மூட்டையிலிருந்து காற்றில் பறந்து செல்வது முதலில் சரக்கு வாகன ஓட்டிக்கு தெரியவில்லை.

California: Cash rains on to US freeway from armoured truck
அமெரிக்காவில் பண மழை குறித்து விசாரணை

அவர் நெடுந்தூரம் சாலையில் பயணித்த பின்பே அவருக்கு நடந்த சம்பவம் தெரியவந்துள்ளது. பின்னர் அவர் நிதானமாக சுதாரித்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

எனினும் பணம் மூட்டையிலிருந்து எவ்வாறு பறந்து சென்றது என்பது குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. நெடுஞ்சாலையில் சரக்கு வாகனத்திலிருந்து பணம் பறந்து வந்தது அப்பகுதி மக்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காட செய்துள்ளது.

கொடுக்குற தெய்வம் கூரையை பிய்த்துக்கொண்டு கொடுக்கும் என்பார்கள், அது இதுதான் போல.

இதையும் படிங்க : ’மெய்நிகர் பணம் நாட்டின் பொருளாதாரத்தைத் தகர்க்கும்’ - எச்சரிக்கும் சைபர் பாதுகாப்பு ஆய்வாளர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.