இந்தியாவில் தற்போது கரோனா பாதிப்பு குறைந்துவருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்தியாவிலிருந்து பிற நாடுகளுக்குச் செல்ல இரண்டு தவணை தடுப்பூசி போடப்படுவது அவசியமாக இருந்தது. இதனால் பலரும் தடுப்பூசி செலுத்திவந்தனர்.
முன்னதாக பிரிட்டன் அரசு இந்தியாவில் இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டிருந்தாலும், அவர்கள் தடுப்பூசி போடாதவர்களாகத்தான் கருதப்படுவர் எனக் கூறியிருந்தது.
இந்தக் கட்டுப்பாடானது அக்டோபர் இரண்டு முதல் நடைமுறைக்கு வந்தது. இதனால் இந்தியா பிரிட்டன் இடையே பிரச்சினை நீடித்துவந்தது.
இந்நிலையில் கரோனாவுக்கு இந்தியாவில் பயன்படுத்தப்படும் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு அங்கீகாரம் அளித்தது. இதனைத் தொடர்ந்து வருகிற 11ஆம் தேதிமுதல் இரு தவணை கோவிஷீல்டு செலுத்திய இந்திய பயணிகள் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள் என பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: 27 புரோட்டா, 1 சிக்கன் ரைஸ் சாப்பிட்டால் தங்க நாணயம் பரிசு!