உலகை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 ( கொரோனா) வைரஸ், தற்போது வேகமாகப் பரவி வருகிறது. இந்த நோய் காரணமாக, உலகளவில் இதுவரை நான்கு ஆயிரத்து 800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், பிரேசில் அதிபர் ஜெயிர் பொல்சோனாரோவின் தலைமை செய்தித்தொடர்பாளரான ஃபேபியோ வஜ்ஜார்டனுக்கு கோவிட்-19 வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.
சமீபத்தில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புடன் சேர்ந்து எடுத்தப் புகைப்படத்தை ஃபேபியோ வஜ்ஜார்டன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். பிரேசில் அதிபர் பொல்சோனாரோவுடன் கடந்த சனிக்கிழமை அமெரிக்கா சென்றிருந்துபோது, ஃபேபியோ ட்ரம்ப்புடன் இந்தப் புகைப்படத்தைத் எடுத்ததாகத் தெரிகிறது. இதுகுறித்து, அதிபர் ட்ரம்ப்பிடம் கேட்டபோது, "இது குறித்து நான் கவலைப்படவில்லை" என தட்டிக்கழித்துவிட்டார்.
இதையும் படிங்க : அதிர்ச்சி: கொரோனா வைரஸால் இந்தியாவில் முதல் உயிரிழப்பு!