ETV Bharat / international

பிரேசில் அரசுக்கு ’அவரசம் கடிதம்’ எழுதிய பொருளாதார நிபுணர்கள்

பிரேசில் நாட்டில் லாக் டவுன் நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டி, அந்நாட்டின் பொருளாதார நிபுணர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

Brazil
Brazil
author img

By

Published : Mar 23, 2021, 1:19 PM IST

பிரேசில் நாட்டின் கரோனா நிலவரம் குறித்து அந்நாட்டின் 200 முன்னணி பொருளாதார நிபுணர்கள் அந்நாட்டு அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், ”தென் அமெரிக்க கண்டத்தின் மிகப்பெரிய நாடான பிரேசில், மிகமோசமான சூழலை எதிர்கொண்டு வருகிறது.

பிரேசில் நாட்டில் பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், சமூக அளவிலும் இதன் தாக்கம் ஆழமாகப் பரவியுள்ளது. அரசு இதற்கு முறையான நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் இந்தப் பெருந்தொற்றை தடுக்க முடியாது. எனவே, அரசு உடனடியாக லாக் டவுன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளனர்.

பிரேசிலில் ஒரு நாளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவாகி வருகின்றன. உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரேசிலில் இரண்டு லட்சத்து 95 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், அடுத்த வாரத்தில் உயிரிழப்பு மூன்று லட்சத்தைத் தொடும் அபாயம் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: வந்தது அடுத்த அலை’: கரோனா குறித்து எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.