கரோனா வைரஸ் நோயின் தாக்கம் தீவிரமடைந்துவருகிறது. குறிப்பாக, அமெரிக்கா, பிரேசில், இந்தியா ஆகிய நாடுகளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. அனைவரும் முகக்கவசம் அணிந்து பாதுகாப்பான வழிமுறைகளை கடைப்பிடித்துவரும் நிலையில், முன்னாள் தடகள வீரரான தனக்கு கரோனா பாதிப்பு ஏற்படாது எனக் கூறி முகக்கவசத்தை அணிவதை பிரேசில் அதிபர் போல்சோனரோ மறுத்துவந்தார்.
கரோனாவுக்கு எதிராக ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பயனளிக்கவில்லை, ஆபத்தான பக்க விளைவுகளை அது உண்டாக்குகிறது என உலக சுகாதார அமைப்பு, பிரிட்டன், அமெரிக்கா மேற்கொண்ட ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், லட்சக்கணக்கில் அதனை உற்பத்தி செய்ய உத்தரவிட்டு, தற்போது அதன் போஸ்டர் பாயாக அவர் மாறியுள்ளார். கரோனா வைரஸ் நோய் அவரை ஆட்டம் காண வைத்துள்ளது.
பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட அவர், ஹைட்ராக்ஸி குளோரோகுயினை உட்கொள்ளும் காட்சியை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு, பாதிக்கப்பட்டவர்கள் உட்கொள்ளும்படி வலியுறுத்தியுள்ளார். மருந்தின் பயன்களை தான் அடைந்துவருவதாகவம், ஆனால், எதிர்கட்சியினர் இதனை விமர்சித்துவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஹைட்ராக்ஸி குளோரோகுயினை கரோனாவுக்கான மருந்தாக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் முன்னதாக பரிந்துரை செய்திருந்தது. இதனைத் தொடர்ந்து, 20 லட்சம் மருந்துகளை உற்பத்தி செய்ய போல்சோனரோ உத்தரவிட்டுள்ளார். இது, வழக்கமாக உற்பத்தி செய்வதை விட 18 மடங்கு அதிகம்.
அம்மருந்தை பரிந்துரைத்த அமெரிக்காவே தற்போது அதற்கு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்தியா தன்னால் முடிந்ததை செய்துள்ளது - சீன மோதல் குறித்து அமெரிக்கா கருத்து