எத்தியோப்பியா, இந்தோனேஷியா ஆகிய இரு நாட்டில் மிகப்பெரிய கோர விபத்தை எதிர்கொண்ட போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களால் 346 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து, இந்த ரக விமானத்தின் மீது பல்வேறு சர்ச்சை எழுந்த நிலையில், தொடர் விசாரணை நடைபெற்றது. மேலும், பல்வேறு ஏர்லைன்ஸ் நிறுவனங்களும், போயிங் நிறுவனத்துடன் போட்டுக் கொண்ட விமானத்தை ரத்து செய்தது.
இந்நிலையில், மே.17ஆம் தேதி 737 மேக்ஸ் ரக விமானத்தின் மென்பொருட்கள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, தற்போது "பிளையிட் ஸ்டிமுலேடர்" என்று அழைக்கப்படும் விமானிகள் பயிற்சி மேற்கொள்ளும் விமான அறையில் உள்ள தொழில்நுட்ப குறைபாடுகளை சரிசெய்ய ஒப்புகொண்டுள்ளது.