காஷ்மீருக்கு சிறப்புத் தகுதியளித்து வந்த அரசியலைப்பு சட்டம் 370 பிரிவை ஆகஸ்ட் ஐந்தாம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், நாடாளுமன்றத்தின் ஒப்புதலுடன் அம்மாநிலம் ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது.
இந்த நடவடிக்கைகளால் ஜம்மு-காஷ்மீரில் அசாதாரண சூழல் உருவாகாமலிருக்க, ராணுவம் அங்கு குவிக்கப்பட்டு, அரசியல்வாதிகள், பத்திரிகையாளர், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் மீதான கட்டுப்பாடுகள் படிப்படியாகக் குறைக்கப்பட்டு அங்கு இயல்பு நிலை தற்போது திரும்பிவரும் சூழலில், அங்கு நிலவிவரும் கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்க வலியுறுத்தும் மசோதா, அமெரிக்கா நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் (கீழ்) சபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ட்வீட் செய்த இந்திய (தமிழ்) வம்சாவளி பிரதிநிதிகள் சபை உறுப்பினர் பிரமிலா ஜெயபால், "அமெரிக்கா-இந்தியா இடையேயான நல்லுறவை மேம்படுத்துவதோடு, காஷ்மீர் மக்களின் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைளிலும் நான் ஈடுபடுவேன்" எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : இயல்பு நிலைக்குத் திரும்பும் ஜம்மு-காஷ்மீர் - இன்றிலிருந்து இணைய சேவை!