ETV Bharat / international

பிடனுக்கு நெருக்கடி கொடுக்கும் ட்ரம்ப்: கருத்துக்கணிப்பு சொல்வது என்ன? - அமெரிக்க அதிபர் தேர்தல்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்து சமீபத்தில் வெளியான கருத்துக்கணிப்பில், பிடனுக்கு ஆதரவாக 46 விழுக்காடு வாக்குகள் பதிவாக வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிடன்
பிடன்
author img

By

Published : Oct 23, 2020, 5:44 PM IST

அமெரிக்காவில் வரும் நவம்பர் 3ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. குடியரசுக் கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்பும் அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி வேட்பாளராக ஜோ பிடனும் களமிறங்குகின்றனர். இதற்கிடையே, சமீபத்தில் வெளியான கருத்துக்கணிப்பில், ட்ரம்ப்புக்கு எதிரான பிடனின் முன்னிலை குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் தேர்தலுக்கு 12 நாள்கள் மட்டுமே உள்ள நிலையில், இருவருக்குமான வித்தியாசம் நான்கு விழுக்காடாக குறைந்துள்ளது. பிடனுக்கு ஆதரவாக 46 விழுக்காடு வாக்குகளும் ட்ரம்ப்க்கு ஆதரவாக 42 விழுக்காடு வாக்குகளும் பதிவாக வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று விழுக்காட்டினர் வேறு ஒருவருக்கு வாக்களிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். மீதமுள்ள மூன்று விழுக்காட்டினர் வாக்களிக்கப்போவதில்லை எனக் கூறியுள்ளனர்.

கடந்த கருத்துக்கணிப்பைக் காட்டிலும் இந்தக் கருத்துக்கணிப்பில், இருவருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்களின் எண்ணிக்கை 1 விழுக்காடு அதிகரித்துள்ளது. வெளியான அனைத்து கருத்துக்கணிப்புகளின் சராசரியை எடுத்துக் கொண்டால், ட்ரம்பைவிட பிடன் 8.5 விழுக்காடு வாக்குகள் அதிகம் பெறுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ட்ரம்ப் - பிடன் ஆகியோருக்கிடையே நடைபெற்ற இறுதிக்கட்ட பொது விவாதத்தில் கரோனா, இனப்பாகுபாடு, சமத்துவமின்மை, பொருளாதாரம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இருவரும் பேசினர்.

இதையும் படிங்க: இதுதான் அமெரிக்க அதிபரின் ட்விட்டர் பாஸ்வேர்டு?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.