ETV Bharat / international

”எனது நிர்வாகம் அமெரிக்கப் பொருளாதாரத்தை பலப்படுத்தும்” - ஜோ பைடன்

2021ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி அதிபராகப் பொறுப்பேற்கவுள்ள ஜோ பைடன், விரைவில் அமைய உள்ள தனது நிர்வாகம் அமெரிக்காவின் பொருளாதாரத்தை பலப்படுத்தும் என நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

ஜோ பைடன்
ஜோ பைடன்
author img

By

Published : Nov 17, 2020, 9:13 PM IST

Updated : Nov 17, 2020, 9:21 PM IST

சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்று புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன், ”அமெரிக்க நாடு இருள் சூழ்ந்த நிலையில் உள்ளது” என ஒப்புக் கொண்டுள்ளார். கரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை தற்போது அந்நாட்டை மீண்டும் பலமாகத் தாக்கியுள்ள நிலையில், விரைவில் அமைய உள்ள தனது நிர்வாகம், அமெரிக்காவின் பொருளாதாரத்தை பலப்படுத்தும் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

வருகிற ஜனவரி 20ஆம் தேதி அதிபராகப் பொறுப்பேற்கவுள்ள ஜோ பைடன், டெலவர் மாகாணத்தில் முன்னதாகப் பேசினார். அப்போது அமெரிக்காவின் உற்பத்தியை மீட்டெடுக்கவும், சுகாதாரப் பாதுகாப்பு விரிவாக்கம் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கும் ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை தான் செலவழிக்கத் தயாராக இருப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.

மேலும் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் உள்ளூர் வணிகங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் குறுகிய கால ஊரடங்கை அமல்படுத்தலாமா என்ற கேள்விக்கு பதிலளிக்கத் தயக்கம் காட்டி வந்த ட்ரம்ப், அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அமெரிக்கர்கள் முகக்கவசங்கள் அணிவதையும் சமூக இடைவெளியைக் கடைபிடிப்பதை ஊக்குவிக்கும் வகையிலும் தற்போது பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் பைடனின் கரோனா ஆலோசனைக் குழுவில் அங்கம் வகிக்கும் மருத்துவர் மைக்கேல் ஓஸ்டர்ஹோம் என்பவர் சமீபத்தில் நான்கு முதல் ஆறு வாரங்களுக்கு நிதி உதவியுடன் கூடிய ஊரடங்கை பரிந்துரைத்துள்ளார். ஆனால் கரோனா ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களே அவரது கருத்துக்கு கண்டனம் தெரிவித்ததை அடுத்து, அவர் தனது கருத்தை திரும்பப் பெற்றார். முன்னதாக அமெரிக்க நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த ஓஸ்டர்ஹோம், ”அமெரிக்கர்கள் அனைவருக்கும் நிலையான கரோனா விதிமுறைகள் வகுக்கப்பட்டு, அவை பின்பற்றப்பட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

அந்நாட்டில் ஏற்கனவே இரண்டு தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்ட பரிசோதனை நிலையை எட்டியுள்ள நிலையில், அவை விரைவில் பொது மக்களின் பயன்பாட்டு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவது குறித்தும், வருங்காலத்தில் தடுப்பூசிகளை விநியோகிப்பது குறித்தும் பைடன் குழுவுக்கு விளக்கமளிப்பதை ட்ரம்ப் தற்போது தடுத்து வரும் நிலையில், பைடன் குழுவைச் சேர்ந்த ரான் க்ளெய்ன் டிசம்பர் அல்லது ஜனவரியில் ஒரு கரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Last Updated : Nov 17, 2020, 9:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.