அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்ற பின் பல நாட்டு தலைவர்களுடன் தொலைபேசியில் உரையாடிவருகிறார். முதலில் தனது அண்டை நாடுகளான மெக்ஸிகோ மற்றும் கனடா நாட்டு தலைவர்களிடமும், பின்னர் கூட்டணி நாடுகளான நேட்டோ(NATO) நாட்டு தலைவர்களுடன் உரையாற்றினார் பைடன்.
இரு நாட்களுக்கு முன் இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் பேசிய பைடன், நேற்று சீன அதிபர் ஜி ஜிங்பிங்கிடம் தொலைபேசியின் மூலம் உரையாடினார்.
இந்தப் பேச்சுவார்த்தையில் சீனாவின் புத்தாண்டுக்கு வாழ்த்து கூறிய ஜோ பைடன், இரு நாடுகளும் இணைந்து தேச மற்றும் உலக நலன்களை மேம்படுத்த செயல்பட வேண்டும் எனக் கூறியுள்ளார்.
மேலும், அமெரிக்காவின் பாதுகாப்பு, சுகாதாரம், வளம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தரவுள்ளதாகவும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி நிலவ அமெரிக்கா விரும்புவதாகவும் கூறினார்.
அதுமட்டுமின்றி, ஜிங்ஜியாங் பகுதியல் உய்கர் இஸ்லாமியர்களுக்கு ஏற்பட்டுள்ள அடக்குமுறை, ஹாங்காங் போராட்டம், தைவானில் சீனாவின் ஆதிக்கம் உள்ளிட்டவை குறித்தும் சீன அதிபரிடம் தனது ஐயப்பாட்டை தெரிவித்துள்ளார் பைடன்.
இதையும் படிங்க: 'பாங்காங் ஏரி பகுதியில் இருதரப்பு ராணுவமும் பின்வாங்குகிறது' - ராஜ்நாத் சிங்