ETV Bharat / international

கலிபோர்னியாவின் அடுத்த சுகாதாரத் துறைச் செயலர் இவர்தான்? - அறிவித்த ஜோ பைடன் - வாஷிங்டன்

அமெரிக்க அதிபராகவுள்ள ஜோ பைடன், கலிபோர்னியா அட்டர்னி ஜெனரல் சேவியர் பெக்கெராவை சுகாதாரத் துறைச் செயலராக நியமித்துள்ளார்.

biden`
biden
author img

By

Published : Dec 7, 2020, 9:51 AM IST

வாஷிங்டன்: லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்தவரை கலிபோர்னியாவின் சுகாதாரத் துறைச் செயலராக அமெரிக்கா அதிபராகவுள்ள ஜோ பைடன் தேர்ந்தெடுத்துள்ளார்.

அமெரிக்காவின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன், சுகாதாரத் துறையின் செயலராக கலிபோர்னியா அட்டர்னி ஜெனரல் சோவியர் பெக்கெராவை நியமித்துள்ளார். கரோனா வைரசை கட்டுப்படுத்தக்கூடிய பாதுகாப்புச் சட்டத்தினை மேற்பார்வையிடுவதில் முக்கிய நபராக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

செனட் சபை உறுதிப்படுத்தினால் 62 வயதான பெக்கரா, சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறையின் தலைவராகப் பொறுப்பேற்கும் முதல் லத்தீன் அமெரிக்கர் என்ற பெருமையைப் பெறுவார்.

இது 80 ஆயிரம் ஊழியர்களைக் கொண்ட ஒரு டிரில்லியன் டாலர் நிறுவனங்களின் மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை உள்ளடக்கிய ஒரு துறையாகும். முன்னணி மருத்துவ ஆராய்ச்சி மற்றும் சுகாதார காப்பீட்டு திட்டங்களில் 130 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்களை உள்ளடக்கியுள்ளது.

பெக்கெரா 2009-10ஆம் ஆண்டுகளில் ஒபாமா அதிபராக இருந்தபோது, சுகாதாரச் சட்டத் துறையில் முக்கியப் பங்கு வகித்தார்.

இதையும் படிங்க: அமெரிக்க தபால் நிலையத்திற்கு இந்தியரின் பெயர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.