ETV Bharat / international

ஜான் கெர்ரியை சுற்றுச்சூழல் தூதராக நியமித்த பைடன்!

author img

By

Published : Nov 24, 2020, 1:22 PM IST

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்த ஜான் கெர்ரியை சுற்றுச்சூழல் தூதராக நியமித்து ஜோ பைடன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ஜோ பைடன்
ஜோ பைடன்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றிபெற்றுள்ளார். இவரின் அமைச்சரவையில் யார் இடம்பெறுவார்கள் என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. இதனிடையே, ஜனநாயக அதிபர் வேட்பாளர் தேர்வில் கடைசிவரை களத்தில் இருந்த பெர்னி சாண்டர்ஸூக்கு தொழில்துறை அமைச்சர் பதவி வழங்கப்படும் என தகவல் வெளியானது. ஜனநாயக கட்சியின் முக்கிய தலைவர்களை அமைச்சராகவே தூதராகவோ பைடன் நியமிப்பார் எனவும் கூறப்பட்டுவந்தது.

இந்நிலையில், முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரியை சுற்றுச்சூழல் தூதராக நியமித்து ஜோ பைடன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறும் என அதிபர் ட்ரம்ப் அறிவித்திருந்தார். எனவே, காலநிலை மாற்றம் என்ற பெரும் சவாலை சமாளித்து மீண்டும் பாரிஸ் ஒப்பந்தத்தில் சேரும் நோக்கில் ஜான் கெர்ரியை தூதராக பைடன் நியமித்துள்ளார் என கூறப்படுகிறது.

இதுகுறித்து கெர்ரி தனது ட்விட்டர் பக்கத்தில், "பாரிஸ் ஒப்பந்தத்தின் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் அதிகமாக உள்ளன. தற்போதைய தலைமுறையினருக்கும் எதிர்கால தலைமுறையினருக்கும் மிகப்பெரிய சவாலாக விளங்கும் காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டு மீண்டும் அமெரிக்காவை நிலை நிறுத்த அரசில் இடம்பெற்றுள்ளேன். இதற்கு அனைவரின் ஒருங்கிணைப்பும் தேவைப்படுகிறது" என பதிவிட்டுள்ளார்.

இதற்கு, உலக சுகாதார அமைப்புகள் வரவேற்பு தெரிவித்துவருகின்றன. பைடனின் நெருங்கிய நண்பரான கெர்ரி, 2004ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் ஜார்ஜ் புஷ்ஷிடம் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.