அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3ஆம் தேதி (நேற்று) நடைபெற்றது. இதில் அதிபர் பதவிக்கு குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர். முடிவுகள் அறிவிக்கப்பட்டுவரும் நிலையில், சட்டவிரோதமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருவதாகவும் அதனை தடுக்க உச்ச நீதிமன்றம் செல்வேன் எனவும் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள பிடன் தரப்பு, சட்டப்போராட்டத்தை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. இது குறித்து பிடன் பரப்புரை மேலாளர் ஜென் ஓ'மல்லி தில்லன் வெளியிட்ட அறிக்கையில், "தேர்தல் முடிவுகள் முறையாக அறிவிக்கப்பட்டு வருகிறது. அதனை தடுக்க நீதிமன்றம் செல்லவுள்ளதாக அதிபர் தெரிவித்துள்ளார். அதை தடுக்க எங்களிடம் சட்ட குழு உள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தோல்வியை சந்திக்கிறதா குடியரசு கட்சி? உச்ச நீதிமன்றம் செல்வேன் என ட்ரம்ப் கூறுவதற்கு காரணம் என்ன?