ETV Bharat / international

ராமாயண, மகாபாரத கதைகளுக்காக குழந்தை பருவத்தை ஒதுக்கிய ஒபாமா - புராதாணக் கதைகள்

முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா தனது குழந்தைப் பருவத்தின் காலங்களை ராமாயண, மகாபாரத கதைகளை கேட்பதற்காக ஒதுக்கியதாக கூறியுள்ளார்.

Barack Obama spent childhood years listening to Ramayana and Mahabharata

author img

By

Published : Nov 17, 2020, 12:53 PM IST

வாஷிங்டன்: முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா 'எ பிராமிஸ்ட் லேண்ட்' என்ற நினைவுக் குறிப்பு புத்தகத்தை எழுதியுள்ளார். அந்தப் புத்தகத்தில் தன்னுடைய கடந்த கால அனுபவங்களை விவரித்துள்ள அவர், தான் இந்தியாவை பார்த்ததில்லை என்றாலும், அந்நாட்டைக் குறித்து பல சிறப்பான சிந்தனைகளைக் கொண்டிருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

அதில், நான் இந்தியாவை உலக மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கினைக் கொண்டுள்ள நாடு, இரண்டாயிரத்திற்கும் அதிகமான இனக்குழுக்களைக் கொண்ட நாடு, 700க்கும் அதிகமான பேசும் மொழிகளைக் கொண்ட நாடு என இந்தியா குறித்த பல்வேறு கற்பனைகளைக் கொண்டிருந்தேன்.

நான் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின், 2010ஆம் ஆண்டில்தான் இந்தியா வந்தேன். அதற்கு முன்னதாகவே இந்த நாடு என் மனதில் தனியாக சிறப்பு இடத்தை பிடித்து விட்டது.

அதுமட்டுமின்றி, இந்தோனேசியாவில் என்னுடைய குழந்தை பருவம் இந்தியாவில் புராதான நூல்களாக பாவிக்கப்படும் ராமாயணம் மற்றும் மகாபாரதக் கதைகளைக் கேட்க செலவிடப்பட்டது. என்னுடன் கல்லூரியில் பயின்ற இந்திய மற்றும் பாகிஸ்தானிய நண்பர்கள் தனக்கு பருப்பு மற்றும் கீமா செய்வது குறித்தும் கற்றுக்கொடுத்தனர். மேலும் என்னை பாலிவுட் படங்களின் ரசிகராகவும் மாற்றினர்களாகவும் என குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக இந்தப் புத்தகத்தில் இந்திய தலைவர்கள் குறித்த கருத்துகளையும் பதிவிட்டிருந்தார். அதில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குறித்து கூறியிருந்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'ராகுல் பதற்றமானவர், பக்குவப்படாமல் இருக்கிறார்' - ஒபாமா கருத்திற்கு காங். கூறுவது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.