சாவ் பாலோ: பிரேசிலின் சாவ் பாலோவில் ஒருவாரமாக கனமழை பெய்துவந்தது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே சாவ் பாலோ நகரில் வெள்ளம் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து சாவ் பாலோ ஆளுநர் ஜோவா டோரியா தனது ட்விட்டர் பக்கத்தில் "கனமழையால் ஏற்பட்ட சேதங்களை மிகுந்த வருத்தத்துடன் கவனித்துவருகிறேன். நிலச்சரிவில் உயிரிழந்த 18 பேரின் குடும்பத்தினர், நண்பர்களுக்கு எனது இரங்கல்.
தீவிரமாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்" எனப் பதிவிட்டுள்ளார். வெள்ளம் காரணமாக 500 குடும்பங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளன. பிரேசிலில் ஆண்டுதோறும் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்படுவதும், இதனால் உயிரிழப்புகள் ஏற்படுவதும் வாடிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க: வூஹானில் மற்றொரு வைரஸ்; தடுப்பூசியால் பயனில்லை - அபாய ஒலி எழுப்பும் ஆய்வாளர்கள்