ETV Bharat / international

2011 ES4 சிறுகோள் செப்டம்பர் 1ஆம் தேதி பூமியைக் கடக்கும்: நாசா! - நாசா

2011 ES4 சிறுகோள் செப்டம்பர் 1ஆம் தேதி பூமியைக் கடந்து செல்லும் என்று நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

asteroid 2011 ES4
asteroid 2011 ES4
author img

By

Published : Aug 31, 2020, 8:00 AM IST

வாஷிங்டன்: செப்டம்பர் 1ஆம் தேதி 22 முதல் 49 மீட்டர் வரை விட்டம் கொண்ட ஒரு சிறுகோள் சந்திரன் அருகில் இருந்து பூமியைக் கடந்து செல்லும் என்று தேசிய ஏரோநாட்டிக்ஸ் மற்றும் விண்வெளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சிறுகோள் 2011 ES4 பூமியைத் தாக்கும்? இல்லை. 2011 ES4இன் நெருங்கிய அணுகு முறை ஒரு வானியல் அளவில் 'நெருக்கமாக' இருக்கும். ஆனால், உண்மையில் பூமியைத் தாக்கும் ஆபத்தை ஏற்படுத்தாது.

கிரகப் பாதுகாப்பு நிபுணர்கள் இது குறைந்தது 45 ஆயிரம் மைல்கள் (7 லட்சத்து 92 ஆயிரம் கால்பந்து மைதானங்கள் அளவு) தொலைவில் பாதுகாப்பாக கடந்து செல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். செப்டம்பர் 1, செவ்வாயன்று கடக்கும் என "நாசா சிறுகோள் கண்காணிப்பு மையம்'' சமீபத்தில் ட்வீட் செய்தது.

அதில், "சிறுகோளின் ஒப்பீட்டு வேகத்தை விநாடிக்கு 8.16 கிலோ மீட்டர் என்று நாசா மதிப்பிடுகிறது. கடைசியாக சிறுகோள் 2011 ES4 பூமியின் மேல் பறப்பது நான்கு நாள்கள் தரையில் இருந்து தெரியும். இந்த முறை, இது பூமியை விட 3.84 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள சந்திரனை விட நெருக்கமாக 1.2 லட்சம் கிலோ மீட்டர் தூரத்துடன் நமது பூமிக்கு நெருக்கமாக இருக்கும்.

அபாயகரமான சிறுகோள் எனப் பட்டியலிடப்பட்ட இந்த சிறுகோள், முதன்முதலில் 2011 வசந்த காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. ஒவ்வொரு ஒன்பது ஆண்டுகளுக்கும் ஒருமுறை பூமிக்கு அருகே செல்கிறது.

நாசாவின் கூற்றுப்படி, சிறுகோளின் திறனை அளவிடும் அளவுருக்களின் அடிப்படையில் இது ஒரு "அபாயகரமான சிறுகோள்" எனத் தற்போது வரையறுக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.