உலகைச் சூறையாடி வரும் கரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஏராளமான ஆய்வு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.
இந்தச் சூழலில், கரோனா வைரஸ் ஒரு ஆரோக்கியமான மனித செல்லைத் தாக்குவதிலிருந்து 100 விழுக்காடு தடுத்து நிறுத்தும் ஆன்டிபாடியை தாங்கள் கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரைச் சேர்ந்த சோரெண்டோ தெரப்யூடிக்ஸ் என்ற ஆய்வு நிறுவனம் அறிவித்துள்ளது.
இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "STI-1499 என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த ஆன்டிபாடி பயன்பாட்டுக்கு வந்தால் பலரது உயிரைக் காப்பாற்றும். இதைப் பயன்பாட்டுக்கு கொண்டுவர தேவையான அனைத்து பணிகளையும் இரவு பகலாக செய்து வருகிறோம்" என்றார்.
இதுவரை எண்ணில் அடங்கா ஆன்டிபாடிகளை சோரெண்டோ தெரப்யூடிக்ஸ் நிறுவனம் ஆய்வு செய்து கரோனாவை தடுக்க நூற்றுக்கணக்கான ஆன்டிபாடிகளை கண்டறிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்கக : உடற்சூட்டை அறியும் தன்மையில் வெளியாகும் GOQii வைட்டல் 3.0 ஸ்மார்ட் கை அணிகலன்!