அமேசான் நிறுவனத்தின் கிண்டில், எக்கோ ஸ்மார்ட் ஸ்பீக்கர் உள்ளிட்ட தயாரிப்புகள் மிகவும் பிரபலமானவை. உலகெங்கும் பல கோடி பேர் பயன்படுத்தும் இந்த தயாரிப்புகளை அமேசான் நிறுவனத்தின் ஆராய்ச்சி பிரிவான லேப்123 (Lab126) உருவாக்கியது.
இந்த Lab126 பிரிவு தற்போது கரோனா தொற்று குறித்த மருத்துவ பரிசோதனை கருவிகளை உருவாக்க புதிய பொறியாளர்களை வேலைக்கு அமர்த்திவருவதாக GeekWire நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
Lab126இன் அலுவலகம் தற்போது அமெரிக்காவின் சிலிகான் பள்ளத்தாக்கில் உள்ளது. இருந்தாலும், இப்போது கரோனா மருத்துவக் கருவிகளை உருவாக்கும் ஆராய்ச்சிகள் பாலஸ்தீனத்திலுள்ள ஹெப்ரான் நகரில் நடைபெறுகிறது. எனவே, புதிதாக வேலைக்கு அமர்த்தப்படுபவர்களின் பணியிடம் ஹெப்ரான் நகரில் இருக்கும் என்றும் GeekWire தெரிவித்துள்ளது.
மேலும், அமேசான் நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு அதிக அளவில் மருத்து பரிசோதனைகளை மேற்கொள்ள ஏதுவாக அந்நிறுவனம் சொந்தமாக ஒரு மருத்துவ ஆய்வகத்தை அமெரிக்காவில் கட்டிவருகிறது.
இந்த ஆய்வகம் குறித்து அமேசான் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விரைவிலேயே இந்த ஆய்வகம் செயல்பாட்டுக்குவரும். தொடக்கத்தில் மிகக் குறைந்த அளவிலான அமேசான் நிறுவனத்தின் முன்களப் பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவிலுள்ள அமேசான் நிறுவனத்தின் சேமிப்புக் கிடங்கில் பணியாற்றுபவர்கள் உயிரிழப்பது தொடர்ந்து நடைபெற்றுவருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை அமேசான் சேமிப்புக் கிடங்கில் பணியாற்றிவந்த எட்டு பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஒரே மாதத்தில் நான்கு லட்சம் சைபர் தாக்குதல்கள்!