இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதவிட்டிருந்த ட்வீட்டில், "ஈராக்கில் அமைந்துள்ள இரண்டு ராணுவத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் எத்தனைப் பேர் உயிரிழந்துள்ளனர், எவ்வளவு பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது என்பன குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இதுவரையில் எல்லாம் நலமாகவே உள்ளது. எந்தப் பிரச்னையும் இல்லை. உலகம் முழுவதும் மிகச் சக்திவாய்ந்த ராணுவ ஆயுதங்களும், ராணுவப் படையும் வைத்துள்ளோம். இந்தத் தாக்குதல் தொடர்பாக நாளை அறிக்கை வெளியிடுவேன்"எனத் தெரிவிதுள்ளது.
அமெரிக்க ராணுவப் படையினர் முகாமிட்டுள்ள இரண்டு ஈராக் விமானத் தளங்கள் மீது இன்று அதிகாலை ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. ஈரான் பாதுகாப்புப் படை தளபதி காசிம் சுலைமானியை அமெரிக்கா கொலை செய்ததற்கு, பழிவாங்கும் நோக்கில் இந்தத் தாக்குதல் அரங்கேற்றியதாக அந்நாடு தெரிவித்துள்ளது.
இது மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவிவரும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க : அமெரிக்க விமான தளம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்! - உச்சகட்ட பதற்றம்