அமெரிக்காவின் செனட் சபையின் நான்கு உறுப்பினர்கள், அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பியோவுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளனர்.
அந்தக் கடித்தில், "ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் தன்னாட்சி உரிமைகள் தன்னிச்சையாக ரத்து செய்யப்பட்டு ஆறு மாதத்துக்கு மேலாகியும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அப்பிராந்தியத்தில் இணையச் சேவைகளை இன்னும் முடக்கத்திலேயே வைத்திருக்கிறது.
முக்கிய அரசியல்வாதிகள் உட்பட நூற்றுக்கணக்கான காஷ்மீரிகள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்தியாவில் வாழும் சிறுபான்மையின சமூகத்தினருக்கும் அந்நாட்டின் மதச்சார்பின்மைக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் நரேந்திர மோடி அரசு சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டுவருகிறது.
எனவே, அரசியல் காரணங்களுக்காகக் அந்நாட்டில் எத்தனை பேர் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஜம்மு-காஷ்மீரில் தற்போது நிலவிவரும் தடைகள் என்னென்ன. அங்கு எந்தளவுக்கு மதச் சுதந்திரம் உள்ளது உள்ளிட்டவை குறித்து பரிசீலனை செய்ய வேண்டும்" என வலியுறுத்தியுள்ளனர்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இம்மாத இறுதியில் முதன்முறையாக இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், இந்தக் கடிதத்தை அவர்கள் எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : 'இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளது' - ட்ரம்ப்