ETV Bharat / international

அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற தந்தை - மகள் நீரில் மூழ்கி பலி - ரியோ கிராண்டே

மெக்சிகோ: அமெரிக்காவுக்கு குடியேற நினைத்த தந்தையும் அவரது இரண்டு வயது மகளும் ஆற்றைக் கடக்க முயன்றபோது நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

தந்தை - மகள் நீரில் மூழ்கி பரிதாப பலி
author img

By

Published : Jun 27, 2019, 2:38 PM IST

எல் சால்வடோர் நாட்டைச் சேர்ந்தவர் மார்ட்டினஸ். இவரது மனைவி டானியா வனீசா அவலோஸ். இவர்களுக்கு வலேரியா என்ற இரண்டு வயது நிரம்பாத மகள் உள்ளார்.

இவர்கள் கடந்த வாரம் பிழைப்பு தேடி அமெரிக்காவில் தஞ்சமடைய முடிவு செய்தனர். இதற்காக ஆயிரம் மைல் தூரம் பயணம் செய்த அவர்கள், அமெரிக்க எல்லையை ஒட்டியுள்ள மெக்சிகோவின் மடமோரஸ் நகருக்கு ஜூன் 23ஆம் தேதி வந்தனர். அப்போது அங்கிருந்த சர்வதேச எல்லையில் உள்ள பாலம் மூடப்பட்டிருந்தது. அது மறுநாளே (ஜூன் 24) திறக்கும் என அங்குள்ளவர்கள் தெரிவித்தனர்.

அதுவரை அங்கு காத்திருக்க விரும்பாத மார்ட்டினஸ் குடும்பத்தினர், அருகே உள்ள ரியோ கிராண்டே ஆற்றைக் கடந்தால் அமெரிக்காவிற்கு எளிதாக சென்றுவிடலாம் என கருதியுள்ளனர். இதனையடுத்து மார்ட்டினஸ், மகளை, தனது சட்டைக்குள் நுழைத்து சுமந்தபடி நீச்சலடித்து சென்றுள்ளார்.

தந்தை - மகள் நீரில் மூழ்கி பரிதாப பலி
தந்தை - மகள் நீரில் மூழ்கி பரிதாப பலி

ஆனால் ஆற்று நீரின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் நீரில் அடித்துச் செல்லப்பட்டு மார்டின்ஸூம் அவரது மகளும் உயிரிழந்தனர். இதனைப் பார்த்த அவரது மனைவி, மெக்சிகோ கரைக்கு திரும்பிவிட்டார். மார்ட்டினஸும், அவரது மகள் வலேரியாவும் இறந்து சடலமாக கரை ஒதுங்கினர். இந்தப் புகைப்படம் நேற்று (ஜூன் 26) மெக்சிகோ நாளிதழில் வெளியானது. தற்போது சர்வதேச அளவில் வெளியாகி, அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து எல்லை விவகாரத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

2015ஆம் ஆண்டு சிரியாவில் இருந்து சென்ற படகு ஒன்று கவிழ்ந்த விபத்தில் மூன்று வயது சிறுவன் நீரில் மூழ்கி இறந்து கரை ஒதுங்கிய படம் வெளியாகி உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:

MEXICO DEATH FATHER AND SON

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.