ETV Bharat / international

'இந்தியா, சீனா உடனான கொள்கைகளை ஜோ பிடன் வாபஸ் பெற மாட்டார்' - நிபுணர்கள் கருத்து - அமெரிக்க வெளியுறவுக் கொள்கை

வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றிபெறுவார் என கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், ஜோ பிடன் அதிபராகும் பட்சத்தில் அவரது வெளியுறவுக் கொள்கை எவ்வாறு இருக்கும் என மூத்த செய்தியாளர் அரோனிம் பூயான் விளக்குகிறார்.

A Biden White House unlikely to roll back US policies on India, China: Experts

author img

By

Published : Aug 10, 2020, 7:09 PM IST

இந்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெறுவார் என்ற கருத்துக்கணிப்பு மற்றும் பிற கணிப்புகள் கூறும் நிலையில், அமெரிக்காவும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தக யுத்தம், இந்தியா-அமெரிக்க உறவுகள் இதுபோன்ற சூழ்நிலையில் எவ்வாறு இருக்கும் என்பது குறித்த ஊகங்களுக்கு மத்தியில் அமெரிக்க முன்னாள் துணை அதிபரின் கீழ் அமையவிருக்கும் ஒரு புதிய வெள்ளை மாளிகை நிர்வாகம், இந்தப் பிரச்சினைகளில் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கைகளில் பின்வாங்காது என்று பார்வையாளர்கள் நம்புகிறார்கள்.

தற்போது சுமார் இருபது ஆண்டுகளாக இந்தியா-அமெரிக்க இருதரப்பு உறவு முன்னேறி வரும் நிலையில், சீன அதிபராக ஜி ஜின்பிங் பொறுப்பேற்றதிலிருந்து உலக வல்லரசாக முதலிடத்திற்கு வருவதற்கான சீனாவின் முயற்சிக்கு எதிராக அமெரிக்கா ஒரு வலுவான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

இப்போது அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்தால் பிடன் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவார் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. ரியல் க்ளியர் பாலிடிக்ஸின் தரவுகளின் அடிப்படையில் சமீபத்திய ஃபைனான்சியல் டைம்ஸ் கருத்துக்கணிப்பின்படி, ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் 538 வாக்குகளில் 308 வாக்குகளைப் பெற முடியும், டிரம்ப்பால் 113 வாக்குகள் மட்டுமே பெற முடியும். வேட்பாளர் வெற்றிபெறுவதற்கு 538 வாக்குகளில் 270 வாக்குகளைப் பெற வேண்டும்.

இதற்கிடையில், அமெரிக்க பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற வரலாற்று பேராசிரியர் ஆலன் லிட்ச்மனும் இந்த ஆண்டு தேர்தலில் பிடன் வெற்றி பெறுவார் என்று கணித்துள்ளார். 13 வரலாற்று காரணிகளை கணக்கில் எடுத்துக்கொண்டு அவர் உருவாக்கிய “காரணிகள்” மாதிரியை அடிப்படையாகக் கொண்டு லிட்ச்மேன் தனது கணிப்பை வெளியிட்டார். மற்ற கருத்துக் கணிப்பு முறைகளிலிருந்து தனித்துவமாக இருக்கும் அவரது மாதிரியை அடிப்படையாகக் கொண்டு கடந்த நாற்பது ஆண்டுகளில் துல்லியமான அதிபர் தேர்தல் வாக்கெடுப்பு முடிவு கணிப்புகளை தருவதில் அவர் புகழ் பெற்றவர்.

ட்ரம்ப் கோவிட்-19 நெருக்கடியைக் கையாண்டது மற்றும் அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் நவம்பர் 3ம் தேதி நிர்ணயிக்கப்பட்ட வாக்குப்பதிவை, தொற்றுநோய் காரணமாக தபால் வாக்களிப்பு தவறான முடிவுகளுக்கு வழிவகுக்கும் என்ற அடிப்படையில் ஒத்திவைக்க அவர் அழைப்பு விடுத்தது போன்ற கடுமையான விமர்சனங்களுக்கு மத்தியில் இந்த கணிப்பு முடிவுகள் வந்துள்ளன..

எவ்வாறாயினும், பிடன் தேர்தலில் வெற்றி பெற்றாலும், இந்தியாவுடனான உறவு, சீனாவுடனான வர்த்தகப் போர் குறித்த நிலைப்பாடு மற்றும் பெய்ஜிங்கின் போர்க்குணம், தென் சீனக் கடல் மற்றும் இந்தோ-பசிபிக் பகுதியில் அதிகரிக்கும் அதன் தடம் ஆகியவற்றைப் பற்றி வரும்போது, வெள்ளை மாளிகையில் புதிதாக குடியேறவுள்ளவர் டிரம்ப் நிர்வாகத்தின் கொள்கைகளைத் திரும்பப் பெற வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் கருதுகின்றனர்..

"இந்தியா-அமெரிக்க உறவு ஒரு நெருக்கமான நிலையை எட்டியுள்ளது" என்று வெளிவிவகார அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் பினக் ரஞ்சன் சக்ரவர்த்தி ஈடிவி பாரத்-திடம் தெரிவித்தார்.

இந்தியாவும் அமெரிக்காவும் இரு நாடுகளிலும் இரு கட்சி ஆதரவைப் பெறும் உலகளாவிய உத்திசார் கூட்டணித்துவத்தைப் பகிர்ந்து கொள்கின்றன. இது பகிரப்பட்ட ஜனநாயக மதிப்புகளை அடிப்படையாகக் கொண்டு இருதரப்பு, பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகளில் ஆர்வங்களை அதிகப்படுத்துகிறது. வாஷிங்டனின் நெருங்கிய பாதுகாப்பு மற்றும் இராஜதந்திர நட்பு நாடுகளுக்கு இணையாக புது தில்லியை கொண்டு வந்து, இந்தியாவை ஒரு முக்கிய பாதுகாப்பு கூட்டாளியாக அமெரிக்கா உருவாக்கியுள்ளது.

அமெரிக்க இந்திய அரசியல் நடவடிக்கைக் குழுவின் நிறுவனர் உறுப்பினர் ரபீந்தர் சச்தேவ் கருத்துப்படி, பிடன் ஆட்சிக்கு வந்தால், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் அதே வழியில் தொடரும். ஏனெனில் அமெரிக்க இந்தியா உறவுகளின் ஆழம் சில முக்கியமான நிலையை எட்டியுள்ளது. எனவே உறவு எப்போதும் ஒரு மேல்நோக்கி செல்லும் பாதையில் இருக்கும்.

"ஆனால் இப்போது எந்தளவு மாறக்கூடும் என்றால், சில விஷயங்களில் அது அதிகரிக்கக்கூடும், சில விஷயங்களில் அதே பாதையில் தொடரக்கூடும், ஆனால் அதிக தீவிரம் இருக்காது" என்று சச்தேவ் கூறினார். இருப்பினும், அதே நேரத்தில், அமெரிக்க காங்கிரஸின் மேல் மற்றும் கீழ் சபைகள் இரண்டுக்குமான தேர்தல் உள்ளது என்பதையும் ஒருவர் நினைவில் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். பிரதிநிதிகள் சபை, கீழ் சபை ஆகியவை ஜனநாயகக் கட்சியினரால் கட்டுப்படுத்தப்படுகிறது, செனட் சபை குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது.

நிபுணரின் கருத்து

"செனட் சபையில் ஜனநாயக கட்சி பெரும்பான்மை பெற்று பிடன் வெள்ளை மாளிகையில் இருந்தால், அமெரிக்க-இந்தியா உறவுகள் ஒரு சிக்கலான பாதையில் செல்லும் என்று நான் நினைக்கிறேன், ஏனென்றால் இந்தியாவை விமர்சிக்கும் ஜனநாயகக் கட்சியினர் பலரும் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபையை கட்டுப்படுத்துவதால் சில சிக்கல்கள் உருவாகி அவர்களுக்கு அதிக அழுத்தத்தை கொடுக்கும், ”என்று சச்தேவ் கூறினார்.

"அமெரிக்க அமைப்பில், ஜனாதிபதி நிச்சயமாக அனைத்து முக்கிய அதிகாரங்களையும் தன்னிடம் வைத்திருக்கிறார் என்பதையும் ஆனால் பிரதிநிதிகள் சபை, மற்றும் செனட் சபை ஆகியவை பெரும்பான்மையானவர்கள் என்ற அடிப்படையில் அவர்கள் நிறைய இடைவெளிகளை உருவாக்க முடியும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். மேலும் அவர்கள் நிறைய மாற்றங்கள் மற்றும் நிபந்தனைகளை கோரலாம், மசோதாக்கள் மற்றும் தீர்மானங்களை கொண்டு வரலாம் மற்றும் வேறு சில மசோதாக்களில் சில திருத்தங்களை இணைக்கலாம். ” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

அமெரிக்கா இந்தியாவுடன் விரிவாக்கப்பட்ட வர்த்தக உறவை நாடுகிறது என்பது பரஸ்பரமான மற்றும் நியாயமானதாகும். 2019ஆம் ஆண்டில், சரக்கு மற்றும் சேவைகளில் ஒட்டுமொத்த அமெரிக்க இந்தியா இருதரப்பு வர்த்தகம் 149 பில்லியனை எட்டியது. அமெரிக்க எரிசக்தி ஏற்றுமதிகள் வர்த்தக உறவின் வளர்ச்சியின் ஒரு முக்கிய பகுதியாகும்.

எவ்வாறாயினும், பிடன் வெள்ளை மாளிகையில் நுழைந்தால் சீனாவுடனான அமெரிக்காவின் உறவின் தன்மை பரவலாக ஊகிக்கப்படுகிறது. சக்ரவர்த்தியின் கூற்றுப்படி, சீன நகரமான வுஹானில் தோன்றிய கோவிட் -19 தொற்றுநோய் ஒரு முக்கிய காரணியாக மாறியுள்ளதால், சீனா மீதான அமெரிக்க நிலைப்பாட்டிலிருந்து பிடன் பின்வாங்க முடியாது.

அதுமட்டுமின்றி, "நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள்" என்று கூறி, அதில் மாற்றங்களைச் செய்வதற்கு கட்டாயப்படுத்தும் நோக்கத்துடன் அதிபர் டிரம்ப் சீனாவின் மீது கட்டணங்களையும் பிற வர்த்தக தடைகளையும் விதிக்கத் தொடங்கிய பின்னர் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே ஒரு பொருளாதார மோதல் நடந்து வருகிறது. அந்த வர்த்தக நடைமுறைகள் மற்றும் அவற்றின் விளைவுகள் ஆகியவை வளர்ந்து வரும் வர்த்தக பற்றாக்குறை, அறிவுசார் சொத்துக்களின் திருட்டு மற்றும் அமெரிக்க தொழில்நுட்பத்தை சீனாவிற்கு கட்டாயமாக மாற்றுவது ஆகியவை அடங்கும்.

இந்த நேரத்தில் சீனா ஒரு திட்டமிட்ட சவாலாக மாறியுள்ளது, பிடன் அதை விரும்பவில்லை என்று சக்ரவர்த்தி கூறினார். தொற்றுநோயின் பின்னணியில் சீனா சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்றும் “ஆனால் அமெரிக்க கொள்கை சரியாக அமைக்கப்பட்டுள்ளது” என்றும் முன்னாள் இராஜதந்திரி சுட்டிக்காட்டினார்.

ஜப்பானின் கிழக்கு கடற்கரையிலிருந்து ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரை வரை பரவியிருக்கும் இந்தோ-பசிபிக் பகுதியில் பெய்ஜிங்கின் வளர்ந்து வரும் செல்வாக்கு அமெரிக்க-சீனா உறவுகளை பாதிக்கும் மற்றொரு காரணியாக உள்ளது. இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து, பிராந்தியத்தில் அமைதி மற்றும் செழிப்புக்காக வெளிப்படையாக செயல்பட்டு வரும் குவாட் அமைப்பு, பெய்ஜிங்கின் கோபத்தை அதிகரிக்கிறது. மேலும், தென் சீனக் கடலில் பல நாடுகளுடன் பிராந்திய மோதல்களைக் கொண்ட சீனாவின் வளர்ந்து வரும் போர்க்குணமும் சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவை "திருத்தல்வாத சக்தி" என்று வர்ணித்த 2017ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அமெரிக்க தேசிய பாதுகாப்பு உத்தி அறிக்கை பற்றி குறிப்பிடுகையில், தென் சீனக் கடல் குறித்த வாஷிங்டனின் கொள்கையை டிரம்ப் மாற்றினார், இன்று கடல் சட்டம் தொடர்பான ஐ.நா. மாநாட்டை (UNCLOS) ஆதரிக்கிறார் என்று சக்ரவர்த்தி கூறினார். இந்தியா-அமெரிக்கா-ஜப்பான்-ஆஸ்திரேலியா ஆகியவற்றை உள்ளடக்கிய குவாட் அமைப்பு மேலும் முன்னேறுவதற்கு சீனா எதிர்ப்பு தெரிவிக்கும்" என்று அவர் கூறினார்.

சச்தேவின் கூற்றுப்படி, சீனா மற்றும் உலக புவிசார் அரசியல் குறித்த டிரம்ப் நிர்வாகத்தின் நிலைப்பாடு மேலும் தீவிரமாகவும் ஆக்கிரோஷமாகவும் இருக்கும். அதுவே நவம்பர் மாதம் வரை உலக புவிசார் அரசியலை மாற்றும் என்று அவர் கூறினார். ஏனென்றால், நீங்கள் ஒரு பாதையில் பயணிக்க தொடங்கியவுடன், சில விஷயங்கள் அதிலிருந்து மீளமுடியாததாகிவிடும். எந்த பொறுப்பாக இருந்தாலும், எந்த அதிபர் வந்தாலும், அது டிரம்ப் அல்லது பிடன் ஆக இருக்கலாம், விரிவான அளவில் அவர் சீன எதிர்ப்புக் கொள்கையைத் தொடருவார்.

2050 அல்லது 2060க்குள் சீனா ஒரு உலக பொருளாதார சக்தியாகவோ அல்லது உலக தொழில்நுட்ப சக்தியாகவோ மாறும் என்று அமெரிக்கா கருதுவதால், வரும்காலங்களில் ஆசிய நாடு ஒரு வல்லரசாக உருவாவதை தாமதப்படுத்த வாஷிங்டன் முயற்சிப்பதாக என்று சச்தேவ், கூறினார்.

இப்போது, ​​டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் என்ன நடக்கிறது என்றால், சீனாவின் எழுச்சியை தாமதப்படுத்துவது மட்டுமல்லாமல், சீனா ஒருபோதும் முதலிடத்திற்கு உயரக்கூடாது என்பதற்காக சீனாவின் எழுச்சியை தடுக்க வேண்டும் என்று அமெரிக்கா நம்புகிறது. எனவே, அதற்காகத்தான் சீனாவுடன் டிரம்ப் பெரிய போரை ஆரம்பித்தார். இப்போது, ​​ பிடன் நிர்வாகம், அதிகாரத்தை எடுத்துக் கொண்டாலும், அதே வழியிலேயே தொடரும் என்று நாம் எதிர்பார்க்கலாம். அமெரிக்கா இந்த அம்சத்தை மேற்கொண்டால் முதலிடத்திற்கு வருவதற்கான சீனாவின் வாய்ப்பை நாம் தடுக்கவோ தாமதப்படுத்தவோ முடியும், ஆகவே அந்த பாதையில் தொடர்ந்து பயணிப்போம். ”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.