ETV Bharat / international

இரட்டை கோபுர தாக்குதல்: அமெரிக்க பாதுகாப்புப் படையின் தோல்வி!

அமெரிக்காவில் 2001 செப்டம்பர் 11ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்கள் என்பவை அந்நாட்டின் உளவுத் துறையின் மிகப்பெரிய தோல்வியாக இதுநாள் வரை கருதப்படுகிறது. இதில் சுமார் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

9/11 attack
9/11 attack
author img

By

Published : Sep 11, 2020, 11:41 AM IST

செப்டம்பர் 11 - இந்தத் தேதியை அமெரிக்கர்கள் மட்டுமல்ல உலகில் யாரும் வெகு எளிதாக மறந்துவிட மாட்டார்கள். சரியாக 19 ஆண்டுகளுக்கு முன், இதே நாளில் அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல் நடைபெற்றது.

வளரும் நாடுகளில் மட்டுமே நடைபெறும் பயங்கரவாத தாக்குதல்கள், முதல்முதலில் உலக வல்லரசாக கருதப்படும் அமெரிக்காவில் நிகழ்ந்தது. 400 காவலர்கள் உள்ளிட்ட மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழக்க காரணமாக அமைந்த இந்தத் தாக்குதல், அமெரிக்க உளவுத் துறையின் மிகப்பெரிய தோல்வியாக இதுநாள் வரை கருதப்படுகிறது.

2001 செப்டம்பர் 11ஆம் தேதி அமெரிக்காவின் மேற்கு கடற்கரைப் பகுதிக்குச் செல்லும் நான்கு அமெரிக்க பயணிகள் விமானங்களை 19 பயங்கரவாதிகள் கடத்தினர். கடத்தப்பட்ட நான்கு விமானங்களில் இரண்டு இரட்டை கோபுரங்களின் மீதும், ஒன்று அமெரிக்க ராணுவத்தின் தலைமை அலுவலகமான பென்டகனிலும் மோதின. மற்றொரு விமானம் யாருமில்லாத திறந்தவெளியில் விழுந்தது.

'அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் 11', 'யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் 175' ஆகியவை இரட்டை கோபுர கட்டடத்தின் வடக்கு, தெற்கு கோபுரங்களில் மோதியதில் 2,753 பேர் உயிரிழந்தனர். கட்டடத்தில் இருந்த வெகு சிலரே உயிர்பிழைத்தனர். மேலும் 10,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள பென்டகன் கட்டடத்தில், 'அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் 77' மோதியதில் 184 பேர் கொல்லப்பட்டனர்.

கடத்தப்பட்ட மற்றொரு 'யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் 93' பென்சில்வேனியாவின் ஷாங்க்ஸ்வில்லுக்கு அருகில் உள்ள திறந்தவெளியில் விழுந்தது. இதில் விமானத்தில் இருந்த பயணிகள், விமானப் பணிப்பெண்கள் உள்பட 40 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த விமானத்தில் பயணித்த பயணிகளும் விமானக் குழுவினரும் இணைந்து மீண்டும் விமானத்தை தங்கள் கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்ததால் கடத்தல்காரர்கள் திறந்தவெளியில் விமானத்தை விபத்துக்குள்ளாக்கினர் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர்.

இந்தத் தாக்குதல் மூலம் அமெரிக்க பாதுகாப்புத் துறையையே கேலிக்குறியதாக அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் மாற்றினார். இதனால் ஆப்கானிஸ்தானில் பதுங்கியிருந்த ஒசாமாவை பிடிக்க அமெரிக்க ராணுவம் அங்கு விரைந்தது. ஆனால், ஒசாமாவைப் பிடிக்கும் படலம் அவ்வளவு எளிதானதாக அமெரிக்காவுக்கு அமையவில்லை.

இரட்டை கோபுர தாக்குதல்: அமெரிக்க பாதுகாப்புப் படையின் தோல்வி!

இரட்டை கோபுர தாக்குதல்களுக்கு பின் ஆப்கானிஸ்தானிலிருந்த தலிபான் ஆட்சியை அமெரிக்கா அகற்றியது. ஆனால் அல்-கொய்தா தலைவரைக் கொல்ல மேலும் சுமார் 10 ஆண்டுகள் ஆகின. இருப்பினும், அமெரிக்க படைகள் இன்னும் ஆப்கானிஸ்தானில் உள்ளன. ஆனால் அமெரிக்கா தனது படைகளைத் திரும்பப்பெற தலிபானுடன் ஒரு சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இன்று நியூயார்க்கில் இரட்டைகோபுர தாக்குதல் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது, இதில் நிகழ்வில் துணை அதிபர் மைக் பென்ஸ் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல அதிபர் ட்ரம்ப், ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் ஆகியோர் பென்சில்வேனியாவில் நினைவு இடத்திற்குச் செல்ல திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுதவிர இரட்டை கோபுர தாக்குதலை நினைவுப்படுத்தும்வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சில நிகழ்ச்சிகள் கரோனா பரவல் காரணமாக ரத்துசெய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுகள் பல கடந்தாலும் செப்டம்பர் 11 என்பது அமெரிக்கர்களின் மனங்களில் வடுவாக மாறிய ஒரு கறுப்புநாள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை!

இதையும் படிங்க: 'பிடன் ஆட்சிக்கு வந்தால் இரட்டை கோபுர தாக்குதல்போல வேறொன்று நடக்கும்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.