அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் பலியாகினர். இந்த சம்பவம் நடைபெற்ற 24 மணி நேரத்தில், அமெரிக்காவின் ஒகையோ மாகாணத்தில் மற்றொரு துப்பாக்கிச் சூடு நிகழ்ந்துள்ளது.
டேடோன் என்ற இடத்திலுள்ள கேளிக்கை விடுதியின் முன் நடந்த இந்தத் துப்பாக்கிச் சூட்டில் ஒன்பது பேர் பலியாகினர். மேலும் காயம் காரணமாக 16 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள்.
அப்பாவி மக்களைத் துப்பாக்கியால் சுட்ட அடையாளம் தெரியாத நபரை காவல்துறையினர் பதிலுக்கு தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.