ETV Bharat / international

அதிபர் அரியணையை அலங்கரிக்கப் போவது யார்? ட்ரம்ப்- பிடன் இன்று கடைசி யுத்தம்!

author img

By

Published : Oct 23, 2020, 6:29 AM IST

Updated : Oct 23, 2020, 7:28 AM IST

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அவரை எதிர்த்து போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடனின் 90 நிமிட வார்த்தை மோதல், தேர்தலுக்கு 12 நாள்களுக்கு முன்னர் இன்றிரவு (அக்.23) நடக்கிறது.

final debate  Trump Biden  election questions  us Election Day  Donald Trump  ட்ரம்ப்- பிடன் இன்று கடைசி வார்த்தை யுத்தம்.. நம் முன்னால் உள்ள 5 கேள்விகள்!  அமெரிக்க அதிபர் தேர்தல் விவாதங்கள்  டொனால்ட் ட்ரம்ப், ஜோ பிடன்  குடியரசுக் கட்சி, ஜனநாயக கட்சி  அமெரிக்க அதிபர் தேர்தல், இறுதி வார்த்தை யுத்தம்

நாஷ்வில்லே: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடனும் வியாழக்கிழமை (அக்.23) இரவு இரண்டாவது மற்றும் இறுதி முறையாக விவாத அரங்கில் சந்திக்கின்றனர்.

இந்த விவாதம் நடைபெறுவதற்கு முன்னர் நம்முன்னால் உள்ள 5 முக்கிய கேள்விகள்!

இந்த விவாதம் மூலம் வெற்றியை ட்ரம்ப் வசப்படுத்துவாரா?

டொனால்ட் ட்ரம்ப்பால் விவாத நேரத்தை மாற்ற முடியாது. தேசிய கருத்துக்கணிப்புகள் அவர் பிடனிடம் தோற்றதைக் காட்டுகின்றன, மேலும் சில மாகாணங்களில் வாக்கெடுப்புகள் கடினமாக உள்ளன. ட்ரம்ப் ஆதரவு வேட்பாளர்கள் தோல்வி குறித்து கவலைப்படுகின்றனர்.

இதெல்லாம் ஒரு பக்கம் நடக்கும்போது, விவாதத்தின் நேரத்தை ட்ரம்ப் மாற்றுவதற்கான வாய்ப்புகள் மிகமிக குறைவு.

கடந்த விவாதத்தில் ட்ரம்ப் அனைத்து விவகாரங்களிலும் பின்தங்கியே காணப்பட்டார். கரோனா விவகாரத்தில் ட்ரம்பின் தாக்குதல் மிக நேர்த்தியாக இருந்தது. இதில் ட்ரம்ப் பின்வாங்கியதையும் பார்க்க முடிந்தது.

ஆகவே தேர்தல் விவாதத்தில் கலந்துகொள்ளும் வகையில் ட்ரம்ப் மேலும் சில விவகாரங்களில் விரிவான கவனம் செலுத்துவார். அவர் தன்னை கதாநாயகனாக, விவாதத்தின் மையப்புள்ளியாக காட்ட முயற்சிப்பார். இதையெல்லாம் அவர் தவிர்க்க வேண்டும். ஆனால் அவரால் இது இயல்பாகவே முடியாது.

மியூட் (முடக்கு) பட்டன் பயன்பாடு தொடருமா?

முதல் விவாதத்தில் ட்ரம்பின் இடைவிடாத குறுக்கீடுகளைக் கருத்தில் கொண்டு, அதிபர் விவாதங்களுக்கான ஆணையம் வியாழக்கிழமை இந்த விவகாரத்திற்கு ஒரு புதிய விதியைச் சேர்த்தது.

அந்த வகையில், ஒவ்வொரு 15 நிமிடத் தொகுதியிலும் எஞ்சியிருப்பது எந்தவிதமான விவாதமும் இல்லாமல் ஒரு திறந்த விவாதமாக இருக்கும் என்று ஆணையம் கூறுகிறது.

இந்த மாற்றம் வேட்பாளர்களுக்கு குறுக்கீடு இல்லாமல் கேள்விகளுக்கு பதிலளிக்க குறைந்தபட்சம் சிறிது நேரம் இருப்பதை உறுதி செய்யும். இருப்பினும், இறுதியில், முடக்கு பொத்தானை 90 நிமிட விவாதத்தின் மொத்த 24 நிமிடங்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். ஆக இம்முறை இதற்கான சாத்தியக் கூறுகள் மிக மிக குறைவு. ஆனால், இந்த விவகாரம் மிகைப்படுத்தப்படலாம்.

பெருந்தொற்று நோய் குறித்து ட்ரம்பிடம் சிறந்த பதில் இருக்கிறதா?

அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், கரோனா வைரஸைப் பற்றி அவர் நீண்ட நேரம் பேச வேண்டும். முதல் விவாதத்தின் போது அவர் செய்ததை விட சிறந்த பதிலை அவர் கூற வேண்டும்.

அவருக்கு ஆதரவான வாக்காளர்களையாவது, நிலைமையைக் கட்டுக்குள் இருப்பதாக நம்ப வைக்க வேண்டும். இது அவ்வளவு எளிதாக இருக்காது. ஏனெனில் கரோனா பாதிப்புகள் அமெரிக்காவில் தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கின்றன.

இரண்டு லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் இறந்துள்ளனர். ஆக கரோனா வைரஸை தடுக்கும் திட்டம் குறித்து அவர் விஞ்ஞான ரீதியாக விளக்க வேண்டும். தொற்றுநோயை தடுக்க முகக்கவசம் அணிய வேண்டும் என்று தொற்றுநோய் நிபுணர் அந்தோணி ஃபாசி கூறினார்.

ஆனால் இத்திட்டத்தையும் ட்ரம்ப் குறைந்து மதிப்பிட்டார். முதல் விவாதத்தில் சீனாவுக்கு பயண தடை விதித்ததை ட்ரம்ப் சுட்டிக் காட்டினார். இது அவரின் கவனமாக பேச்சாக கருதப்பட்டது.

ஆனாலும் அரை நூற்றாண்டில் இல்லாத வகையில் அமெரிக்காவில் சுகாதார நெருக்கடி நிலவுகிறது. இதனை ட்ரம்ப் குறைத்து மதிப்பிடுகிறார் என்ற குற்றஞ்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை ட்ரம்ப் எதிர்கொண்டாக வேண்டும். இதை விட சிறந்த பதில் ஒன்றை அவர் கூற வேண்டும்.

மகன் மீதான புகாரை எவ்வாறு எதிர்கொள்ள போகிறார் பிடன்?

அமெரிக்காவின் முன்னணி ஊடகங்களில் சமீபத்திய நாள்களில் பிடன் மகனின் வனவேட்டைகள் மற்றும் போதைப் பொருள் பழக்கம் குறித்து புகைப்படங்கள் மற்றும் காணொலிக் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திவருகின்றன.

இந்தக் குற்றச்சாட்டுகளை பிடனுக்கு எதிராக மாற வாய்ப்புள்ளது. இதனை முன்னிலைப்படுத்த ட்ரம்ப் முயற்சிப்பார். ஏன்? இதனை பிரச்னையின் மையப்புள்ளியாக மாற்றவும் முயற்சிப்பார்.

பிடனின் இளைய மகன் போதைப் பழக்க வழக்கத்துக்கு அடிமையாக இருந்ததை பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். “தனது மகன் அந்தக் கடின காலத்தில் இருந்து வெளியேறியதை சவாலாக கருதுகிறேன்; தற்போது என் மகனை நினைத்து பெருமைப்படுகிறேன்” என்றும் பிடன் கூறியுள்ளார். இதனால் இவ்விவகாரத்தில் கவனம் செலுத்தாமல் ட்ரம்ப் பின்வாங்கலாம்.

மேலும் இந்த விவகாரம் பிடனை எவ்விதத்திலும் பாதிக்க வாய்ப்பில்லை. எனினும் வியாழக்கிழமை இரவு வார்த்தை விளையாட்டிலிருந்து பிடன் தன்னையும் தனது குடும்பத்தினரையும் நிச்சயம் பாதுகாக்க வேண்டும். நாகரீகமாக சிலவற்றை பேசாமல் தவிர்க்கலாம்.

பிடனின் மிகப் பெரிய எதிரி இன்றைய இரவு தானே?

77 வயதான பிடனின் திறமையான தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் ட்ரம்ப் திணறுகிறார். ஒரு வாழ்நாள் அரசியல்வாதியான அவர், அண்மைக் காலமாக குடியரசுக் கட்சியினரால் நகைச்சுவையாளராக மாற்றப்பட்டுவருகிறார்.

74 வயதான ட்ரம்பும் அவரது ஆதரவாளர்களும் பிடனின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை கேள்விக்குறியாக்கி வருகின்றனர். முதல் விவாதத்தின்போதும் இதனை பார்க்க முடிந்தது. அப்போது, திடமான செயல்திறனுடன் அந்தக் கேள்விகளை அமைதிப்படுத்தினாலும், அவைகளிலிருந்து பிடன் விலகிச் செல்லவில்லை. எனினும் சிலவற்றை தவிர்க்க நினைத்தார். இதனை வைத்து சுதந்திரமான ஆட்சி நடத்த பிடன் தகுதியற்றவர் என்ற பிம்பத்தை குடியரசுக் கட்சியினர் உருவாக்கிவருகின்றனர்.

ஆனால் இம்முறை பிடன் எதற்கும் தயாராக இருப்பார். இதுபோன்ற விவாதங்களிலிருந்தும் அவர் விலகி செல்ல மாட்டார். இதில் கவனம் செலுத்துவார். இருப்பினும் சுய வரலாறு விவகாரத்தில் பிடனிடம் தடுமாற்றம் தெரிகிறது.

மேலும் முதல் விவாதத்தில் பிடன் கை ஓங்கியது. அந்த வகையில் இம்முறை பிடன் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது பிடனுக்கு எவ்விதத்திலும் உதவாது.

இதையும் படிங்க: 'அந்த இரண்டு நாள்கள் அற்புதமான தருணம்'- இந்திய பயணம் குறித்து ட்ரம்ப்

Last Updated : Oct 23, 2020, 7:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.