ETV Bharat / international

'விளைநிலத்தில் திடீர் ராட்சத பள்ளம்' - மேலும் விரிவடைவதால் பொதுமக்கள் அச்சம்

ஒரு விண்கலத்தின் மோதல் காரணமாக உருவான பள்ளம் போல தோற்றமளிக்கும் பிரம்மாண்டமான புதைகுழி மத்திய மெக்சிகோவில் உள்ள விவசாய நிலத்தில் தோன்றியுள்ளது.

300-Foot Sinkhole Threatens To Swallow Home In Mexico

author img

By

Published : Jun 4, 2021, 9:54 AM IST

மெக்சிகோவின் பியூப்லா மாகாணத்தின் சாண்டா மரியா பகுதியில் கடந்த வாரம் சனிக்கிழமை விளைநிலத்தில் திடீரென பள்ளம் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியைடந்துள்ளனர். தொடக்கத்தில் ஒரு சில மீட்டர் அளவு மட்டுமே இருந்த பள்ளமானது, தொடர்ந்து பெரிதாகி கொண்டே கிட்டத்தட்ட 70 ஆயிரம் சதுர அடி வரை விரிந்து விவசாய நிலத்தை விழுங்கி ஒரு பெரிய வட்ட வடிவில் உள்ளது.

மெக்சிகோ விளைநிலத்தில் உருவான திடீர் பள்ளம் - அப்படி என்ன நடந்தது?

தற்போது சுமார் 300 அடி அகலமும், 60 அடி ஆழமும் கொண்டுள்ள இந்த பள்ளமானது மேலும் பெரிதாக வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். இதற்கு முன்பு இங்கு பெரிய அளவிலான குளம் ஒன்று இருந்ததாகவும் அதை ஜாகே என்று அழைத்ததாகவும் உள்ளூர்வாசிகள் நம்புகின்றனர்.

இது குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (யு.எஸ்.ஜி.எஸ்) கூறுகையில், நிலத்தடி நீர் பூமிக்கு அடியில் செல்லும்போது நில மேற்பரப்பிற்கு அடியில் பாறை அரிப்பு உட்பட பல காரணங்களால் இதுபோன்ற பள்ளங்கள் நிகழலாம். பாறை அரிப்பு திடீரென பூமிக்கு அடியில் வெற்றிடத்தை உருவாக்குவதால் பள்ளம் ஏற்படுகிறது என்று தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: பூச்சி ப்ரே: போட்டி போட்டு ருசிக்கும் மக்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.