ETV Bharat / international

ட்ரம்பின் ஆட்சி காலத்தில் மருத்துவ காப்பீட்டை இழந்த 20 லட்சம் பேர்! - அமெரிக்காவில் கரோனா தொற்று

வாஷிங்டன்: ட்ரம்ப் அதிபராக இருந்த கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்கள் மருத்துவ காப்பீட்டை இழந்துள்ளதாக புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trump
Trump
author img

By

Published : Nov 1, 2020, 7:58 PM IST

Updated : Nov 1, 2020, 8:14 PM IST

அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்த போது, 'ஒபாமாகேர்' என்ற காப்பீட்டு திட்டத்தை அவர் அறிமுகப்படுத்தினார். இதன் மூலம் குறைந்த வருமானம் கொண்டவர்களும் மருத்துவ காப்பீட்டு வசதியை பெற முடிந்தது.

ஆனால், கடந்த 2014ஆம் ஆண்டு ஆட்சியை அதிபரான ட்ரம்ப் ஒபாமாகேர் திட்டத்தை ரத்து செய்தார். அந்தத் திட்டம் போதிய பலன் அளிக்கவில்லை என்று கூறிய ட்ரம்ப், அதற்கான மாற்று திட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டார். இருப்பினும், நான்கு ஆண்டுகளில் அதுபோன்ற எந்தவொரு திட்டத்தையும் ட்ரம்ப் அறிவிக்கவில்லை.

அமெரிக்காவின் ஹார்வர்ட் மருத்துவப் பள்ளி மற்றும் நியூயார்க்கின் சிட்டி யுனிவர்சிட்டியின் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், ட்ரம்ப் அதிபராக இருந்த கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்கள் மருத்துவ காப்பீட்டை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காப்பீடு இல்லாத காரணத்தால் கரோனாவுக்கு முன்பு வரை மட்டும் குறைந்தபட்சம் 3,399 பேரும் அதிகபட்சம் 25,180 உயிரிழந்திருக்கலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியின் பேராசியர் ஸ்டெஃபி வூல்ஹான்ட்லர் கூறுகையில், "என்னிடம் சிகிச்சைக்கு வரும் காப்பீடு இல்லாத நோயாளிகளால் பெரும்பாலும் அவர்களுக்குத் தேவையான சிகிச்சையை பெற முடியாமல் போவதை நானே பார்த்திருக்கிறேன். இதனால் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன என்பதையே இந்த ஆராய்ச்சி காட்டுகிறது" என்றார்.

இதையும் படிங்க: 10 லட்சத்தை தாண்டிய கரோனா பரவல்: பிரிட்டனில் மீண்டும் ஊரடங்கு!

Last Updated : Nov 1, 2020, 8:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.