உலகின் முன்னணி சமூக வலைதளமான ட்விட்டர் 2020ஆம் ஆண்டின் ரிவீயூவை தற்போது வெளியிட்டுள்ளது. அதில், அதிக ரீட்வீட்டுகள் பெற்ற நபர்களின் புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் முதலிடத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும், இரண்டாவது இடத்தை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடனும் பிடித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி இந்தப் பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளார். அந்த வகையில், முதல் 10 இடங்கள் பெற்றவர்கள் வருமாறு:-
- டொனால்டு ட்ரம்ப்
- ஜோ பைடன்
- ஜார்ஜ் ப்ளாய்ட் (காவலரால் மரணித்த கருப்பின அமெரிக்கர்)
- கோபி பிரைண்ட் (விமான விபத்தில் மறைந்த கூடைப்பந்து வீரர்)
- பாரக் ஒபாமா
- பி.டி.எஸ். (பாப் பாடகர் குழு)
- நரேந்திர மோடி
- கெய்னி வெஸ்ட் (ராப் கலைஞர்)
- எலான் மஸ்க் ( தொழிலதிபர்)
- கமலா ஹாரிஸ்
அதிகம் ட்வீட் செய்யப்பட்ட ஹாஷ்டாக் பட்டியலில் கோவிட்-19 பெருந்தொற்றை குறிப்பிடும் முதலிடத்தைம் #COVID19 , ஜார்ஜ் ப்ளாய்ட் மரணத்தை குறிப்பிட்டும் #BlackLivesMatter இரண்டாம் இடத்தையும், கோவிட்-19 பாதிப்பை தவிர்க்க வீட்டில் இருப்பதை வலியுறுத்தும் #StayHome மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.
இதையும் படிங்க: நிலநடுக்கத்தால் வளர்ந்த எவரெஸ்ட் சிகரம் - புதிய உயரம் என்ன தெரியுமா?